Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்ட் போட்டி: இறுதிவரை பரபரப்பு.. மீண்டும் ஏமாற்றமடைந்த அஸ்வின்.. இந்திய அணியின் ப்ளேயிங் 11

ஓவல்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் மட்டும் டிராவானது.

ஹெட்டிங்லியில் கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக சொதப்பியது. இதனால் இந்திய அணி பதிலடி கொடுக்கவும், இங்கிலாந்து அணி வெற்றி பாதையை தொடரவும் முணைப்பு காட்டி வருகின்றன.

4வது டெஸ்ட் டாஸ்

4வது டெஸ்ட் டாஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஓவல் மைதான பிட்ச்சானது, முதல் 3 நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் எனவும் 4 மற்றும் 5வது நாளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகும் எனத்தெரிகிறது. எனவே முதலில் பவுலிங் செய்து இந்திய அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட ரூட் திட்டமிட்டுள்ளார்.

 பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்த போட்டிக்காக இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை சட்டீஸ்வர் புஜாரா கடந்த போட்டியில் தனது ஃபார்மை நிரூபித்துவிட்டதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரகானேவுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 போட்டிகளிலும் ரகானேவின் ஃபார்ம் மோசமாக இருந்தது. எனினும் அவர் மீது கோலி நம்பிக்கை வைத்துள்ளார்.

பவுலிங்

பவுலிங்

பவுலிங் படையில் தான் அந்த 2 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அணிக்குள் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

 இந்திய அணி ப்ளேயிங்11

இந்திய அணி ப்ளேயிங்11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, கோலி, ரகானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Story first published: Thursday, September 2, 2021, 19:58 [IST]
Other articles published on Sep 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+