Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 4th Test- பும்ரா நீக்கம்.. முகேஷ் குமாரையும் கழட்டி விட்ட ரோஹித்.. புதிய வீரருக்கு சான்ஸ்

ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. இந்திய அணியில் துணை கேப்டன் பும்ரா நீக்கப்பட்டார். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரையும் வெளியே அமர வைத்தார் ரோஹித் சர்மா. பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ்தீப் என்ற புதிய வேகப் பந்துவீச்சாளரை களமிறக்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.

India vs England 4th Test : India playing XI - Jasprit Bumrah dropped, Akashdeep gets chance

இந்திய அணிக்காக அறிமுகமாகும் 313வது வீரர் ஆவார் ஆகாஷ்தீப். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகம் ஆகும் நான்காவது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர்.

நான்காவது டெஸ்ட்டில் வென்றால் தொடரைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு டாஸ் பெரிய பின்னடைவாக மாறியது. இங்கிலாந்து இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரெஹான் அஹ்மது நீக்கப்பட்டு, ஒல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ரெஹான் அஹ்மது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்தே விலகி இங்கிலாந்து சென்று இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு அறிவித்து இருக்கிறது.

4வது டெஸ்ட்டில் களமிறங்கி உள்ள இந்திய அணியின் பிளேயிங் 11 -

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

4வது டெஸ்ட்டில் களமிறங்கி உள்ள இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11 -

சாக் கிரவுலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Story first published: Friday, February 23, 2024, 9:38 [IST]
Other articles published on Feb 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+