Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேர ட்விஸ்ட்! காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா.. அஸ்வினுக்கு மீண்டும் சிக்கல்..பவுலிங் கோச் தகவல்

ஓவல்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்பார் என்று கூறப்பட்டு வந்த சூழலில் தற்போது மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் மட்டும் டிராவானது.

ஹெட்டிங்லியில் கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக சொதப்பியது. இதனால் இந்திய அணி பதிலடி கொடுக்கவும், இங்கிலாந்து அணி வெற்றி பாதையை தொடரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முனைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஓவல் பிட்ச் ரிப்போர்ட்

ஓவல் பிட்ச் ரிப்போர்ட்

இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் பிட்ச் அமைந்திருந்தது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த சூழலில், பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. ஆனால் 4வது டெஸ்ட் போட்டியில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

ஸ்பின்னர்கள் தேவை

ஸ்பின்னர்கள் தேவை

அதாவது ஓவல் மைதானத்தின் பிட்ச்சானது சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளிலும் குறைந்தது 2 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியில் மீண்டும் அஸ்வின் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள், மற்றும் ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜா செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கும் சமீபத்தில் காயம் ஏற்பட்டது. எனவே இந்த போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படலாம் எனக்கூறப்பட்டது.

 மீண்டும் குழப்பம்

மீண்டும் குழப்பம்

இந்நிலையில் அஸ்வின் களமிறங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ஓவல் பிட்ச் ஸ்பின்னருக்கு உதவக்கூடியது தான். எனினும் பிட்ச்-ன் தற்போதைய சூழலை வைத்து தான் அஸ்வினின் சேர்ப்பு உறுதியாகும். ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. வழக்கமான முறையில் தான் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதற்காக அவர் மருத்துவ உடை அணிந்திருந்ததால், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே அவர் நிச்சயம் அணியில் இருப்பார்.

 ஸ்பின்னர் ஜோடி

ஸ்பின்னர் ஜோடி

அஸ்வின் திறமையான வீரர் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் 3 டெஸ்ட்களிலும் உட்காரவைக்கப்பட்டார். எனினும் இன்றைய போட்டியில் சூழலை பொறுத்து அஸ்வினை கொண்டு வருவோம். முடிந்தால் அஸ்வின் - ஜடேஜா ஜோடியை மீண்டும் இணைத்து அணிக்குள் கொண்டு வருவோம் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, September 2, 2021, 14:10 [IST]
Other articles published on Sep 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+