Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கே.எல்.ராகுலின் தவறான செயல்.. அபராதம் விதித்தது ஐசிசி.. நியாயமே இல்லை என ரசிகர்கள் கொந்தளிப்பு!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் தவறாக நடந்துக்கொண்டதற்காக இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிகட்டத்தில் பரபரப்பாக கட்டத்தை எட்டி உள்ளது.

முதல் இன்னிங்ஸில் 101 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. இதனால் 368 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

 வெற்றி வாய்ப்பு அதிகம்

வெற்றி வாய்ப்பு அதிகம்

இங்கிலாந்து அணி கடைசி நாளில் 300+ ரன்கள் அடிக்க வேண்டும் என்பதால் அந்த அணிக்கு கடும் சவால் நிறைந்துள்ளது. எனினும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் தற்போது இருந்தே வெற்றி பெற்றதாக பதிவிட்டு வருகின்றனர்.

ராகுலுக்கு அபராதம்

ராகுலுக்கு அபராதம்

இந்நிலையில் அவர்களுக்கு சோக செய்தி கடைத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு இந்தப் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது தொடக்க வீரர் கே.எல்.ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி 46 ரன்களுக்கு வெளியேறினார். ஆனால், மைதானத்தை விட்டு வெளியேறும் வரை, அவர் தான் அவுட்டானதை ஒப்புக் கொள்ளவேயில்லை. அதாவது, ஆண்டர்சன் ஓவரில் அவர் பந்தை எதிர்கொள்ள தயாரான போது, அவரது பேட் அவரது பேடின் பின்பகுதியை உரசி முன்னாள் வந்தது. இதனால், பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலி எழுந்தது.

கடும் ஆக்ரோஷம்

கடும் ஆக்ரோஷம்

முதலில் நாட் அவுட் என்று தெரிவிக்கப்பட்டாலும் இங்கிலாந்து வீரர்கள் ஸ்ட்ராங்காக அவுட் அப்பீல் செய்தனர். தொடர்ந்து ரிவ்யூ கேட்கப்பட, அப்போது தான் பந்து பேட்டின் பின்புறம் மிக மிக லேசாக உரசிச் சென்றிருப்பது தெரிந்தது. ஆனால், ராகுல் தனது பேட் பேடில் உரசியதால் தான் சப்தம் கேட்டது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தும், ராகுல் கள நடுவரிடம், 'தான் அவுட் இல்லை.. பேட் பேடில் தான் பட்டது' என்பதை சற்று ஆக்ரோஷமாக சொல்லிவிட்டு சென்றார்.

ஐசிசி நடவடிக்கை

ஐசிசி நடவடிக்கை

கே.எல்.ராகுலின் இந்த செயல் ஐசிசி விதிமுறையின் 2.8 என்ற விதிமுறையை மீறியுள்ளதாக கள நடுவர்கள் புகாரளித்தனர். இதனையடுத்து கள நடுவர்களுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும். அதன்படி கே.எல். ராகுலுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும், போட்டி ஊதியத்தில் 15 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, September 6, 2021, 17:57 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+