Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நபருக்காக இவ்வளவு ஸ்கெட்சா?.. பணியை சிறப்பாக முடித்த உமேஷ்.. ரூட்டை வீழ்த்தியது இப்படி தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவை வைத்து போட்ட மாஸ்டர் ப்ளானை கட்சிதமாக முடித்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 62 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதற்கு காரணம் உமேஷ் யாதவ் தான்.

விமர்சனம்

விமர்சனம்

4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ஷர்துல் தாக்கூர் இணைக்கப்படுவார் என தெரிந்தது. ஆனால் கடைசி நேர ட்விஸ்டாக 2 மாற்றங்கள் நடந்தன. இஷாந்த் சர்மாவுடன் சேர்த்து முகமது ஷமியும் உட்காரவைக்கப்பட்டார். ஷமிக்கு மாற்றாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் கொண்டு வரப்பட்டார்.

140 கிமீ வேகம்

140 கிமீ வேகம்

இதனால் அனைவரும் வியப்படைந்தனர். சீனியர் வீரர் ஷமியை நீக்கிவிட்டு ஏன் உமேஷ் யாதவை கொண்டு வந்தீர்கள் என முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் அனைத்திற்கு பதிலடி கொடுத்து வருகிறார் உமேஷ் யாதவ். இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே, உமேஷ் யாதவ் அசுரவேகத்தில் பந்து வீசின் வந்தார். குறிப்பாக ஒரு சில பந்துகள் எல்லாம் 140 கிமீ வேகபத்தில் சென்றன.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

உமேஷ் யாதவை திடீரென விராட் கோலி கொண்டு வருவதற்கு பின்னால் ஜோ ரூட்டின் விக்கெட் தான் காரணமாக இருந்துள்ளது. இங்கிலாந்து அணியில் அனைத்து விக்கெட்களையும் எடுத்தாலும், ரூட் மட்டும் நிலைத்து நின்று குடைச்சல் கொடுக்கிறார். இதனால் அவருக்கு மீடியம் ஃபேசராக இல்லாமல், முழு வேகத்தில் பந்துவீசினால் அவுட்டாவார் என திட்டமிருந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்றார் போலவே பணியை கட்சிதமாக முடித்துக்கொடுத்தார் உமேஷ் யாதவ்.

உமேஷின் மேஜிக்

உமேஷின் மேஜிக்

இந்த போட்டியில் உமேஷின் முதல் விக்கெட்டாகவே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் இருந்தார். அவரை ஏமாற்றி விக்கெட் எடுத்தார். ஜோ ரூட் களத்திற்கு வரும் வரையிலும், ரூட் களத்திற்கு வந்த சில பந்துகளையும் அவுட் ஸ்விங்காக போட்டு வந்த உமேஷ், திடீரென இன் ஸ்விங் பந்தை மிக வேகமாக உள்ளே வீசினார். ஜோ ரூட் சுதாரித்துக்கொண்டு பந்தை தடுப்பதற்குள்ளாக, அது ஸ்டம்புகளை பதம்பார்த்துவிட்டது. இதனால் கோலி போட்ட ப்ளான் வெற்றிகரமாக முடிந்தது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Friday, September 3, 2021, 20:42 [IST]
Other articles published on Sep 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+