Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷாந்த் சர்மா நீக்கம்.. எனினும் அஸ்வினை சேர்ப்பதில் சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் இளம் வீரர்!

ஓவல்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா வெளியேற்றப்பட்டுவிட்டார். எனினும் அஸ்வினின் பங்கேற்பில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. முதல் டெஸ்ட் மட்டும் டிராவனது.

ஹெட்டிங்லியில் கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக சொதப்பியது. இதனால் இந்திய அணி பதிலடி கொடுக்கவும், இங்கிலாந்து அணி வெற்றி பாதையை தொடரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் இன்று முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஹெட்டிங்லி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முணைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ப்ளேயிங் 11ல் மாற்றங்கள்

ப்ளேயிங் 11ல் மாற்றங்கள்

இங்கிலாந்து களத்தில் சிறப்பாக செயல்படுவார் எனக்கூறப்படும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே முக்கியமானதாக பார்க்கப்படும் 4வது டெஸ்டில் கண்டிப்பாக இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

மீண்டும் குழப்பம்

மீண்டும் குழப்பம்

அனைவரும் எதிர்பார்த்தப்படியே சீனியர் வீரர் இஷாந்த் சர்மா அணியின் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எனினும் அஸ்வின் அணியில் இணைவது குழப்பத்தில் உள்ளது. அதற்கு காரணம் ஷர்துல் தாக்கூர். இந்திய அணியின் லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு உதவ வேண்டும் என்ற காரணத்தை கூறி தான் அஸ்வின் முதல் 3 போட்டிகளில் நீக்கப்பட்டார். மீண்டும் அதே பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது.

வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை

ஷர்துல் தாக்கூர் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் உதவுவார். ஏற்கனவே சில போட்டிகளில் அவரின் பேட்டிங் திறமை நிரூபனம் ஆகியுள்ளதால், அவரை அணிக்குள் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. எனினும் லண்டன் வானிலை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், அஸ்வின் அணியில் இணைக்கப்படலாம்.

Story first published: Thursday, September 2, 2021, 19:58 [IST]
Other articles published on Sep 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+