Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே எந்த வீரரும் செய்யாத மாபெரும் ரெக்கார்டு.. சரித்திரத்தில் இடம் பெறப் போகும் ரோஹித் சர்மா

ராஞ்சி : கிரிக்கெட் உலகில் எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார் ரோஹித் சர்மா. சிக்ஸ் அடிப்பதில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் ரோஹித் சர்மா தான்.

அந்த சாதனையிலும் புதிய மைல்கல் சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார் ரோஹித் சர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா இன்னும் 7 சிக்ஸ் அடித்தால் அந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தலாம்.

India vs England 4th Test : Rohit Sharma may cross 600 sixes and 4000 test runs in Ranchi Test

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 593 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவர் இன்னும் 7 சிக்ஸ் அடித்தால் 600 சிக்ஸ் என்ற மைல்கல்லை எட்டுவார். இதே சாதனைப் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில், 600 சிக்ஸர்கள் என்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மா இதுவரை ஒருநாள் போட்டிகளில் 323 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 190 சிக்ஸர்களும், டெஸ்ட் போட்டிகளில் 80 சிக்ஸர்களும் அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்ததக்கது.

ராஞ்சியில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் ரோஹித் சர்மா இந்த மைல்கல்லை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 3977 ரன்கள் அடித்துள்ள நிலையில் இன்னும் 23 ரன்கள் எடுத்தால் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 987 ரன்கள் எடுத்துள்ள அவர், 13 ரன்களை கடந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே 1000 டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Friday, February 23, 2024, 8:45 [IST]
Other articles published on Feb 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+