For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4வது டெஸ்ட்: டாப் ஆர்டரே தடுமாறிய பிட்ச்-ல்.. ஷர்துல் மட்டும் அதிரடி காட்டியது எப்படி..வெளியான உண்மை

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 191 ரன்களை எடுத்துள்ளது.

 ஓப்பனிங்கே அதிர்ச்சி

ஓப்பனிங்கே அதிர்ச்சி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்த போட்டியிலும் தொடக்கத்திலேயே வரிசையாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முதலில் ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். கடந்த போட்டியில் 91 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்திருந்த புஜாரா, இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதன் பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்களில் வெளியேறினார். டாப் ஆர்டரில் கேப்டன் கோலி மட்டுமே அரைசதம் அடித்து வெளியேறினார். பிறகு துணை கேப்டன் ரகானே 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.

தாக்கூர் கொடுத்த ட்விஸ்ட்

தாக்கூர் கொடுத்த ட்விஸ்ட்

இந்திய அணியை மீட்க ஏதாவது ஒரு பவுலர் நிலையாக நின்று பொறுமையாக ரன்களை சேர்க்க மாட்டாரா என்று எதிர்பார்த்திருந்த சூழலில் ஷர்துல் தாக்கூர் ட்விஸ்ட் கொடுத்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே தடுமாறிய நிலையில் ஷர்துல் தாக்கூர் நாளாபுறமும் பந்தை அடித்து துவம்சம் செய்தார். இதனால் இங்கிலாந்து பவுலர்கள் விழிப்பிதுங்கினர். 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.

ஷர்துலின் ரகசியம்

ஷர்துலின் ரகசியம்

இந்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறிய பிட்ச்-ல் எப்படி ரன் அடித்தார் என்பது குறித்து ஷர்துல் தாக்கூர் பேசியுள்ளார். அதில் அவர், இங்கிலாந்து மண்ணில் பந்தில் நல்ல ஸ்விங் உள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர். இதுபோன்ற மைதானங்களில் கிராஸ் பேட் ஷாட்டுகளை ஆடுவதை தவிர்க்க வேண்டும். ஸ்ட்ரைட் பேட் ஷாட்டுகளை ஆடினால் நிச்சயம் ரன்கள் நமக்கு கிடைக்கும்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

எனது பயிற்சியாளர்கள், என்னை ஸ்ட்ரெயிட் பேட் மூலம் ஆடுவதற்காக அறிவுறுத்தினர். எனவே முதலாவது இன்னிங்ஸில் நான் ஸ்ட்ரைட் பேட் மூலமாகவே ரன்களை சேர்க்க நினைத்தேன். மேலும் அணி இருந்த சூழலில் எனது அதிரடி தேவை என்பதனால் நான் என்னுடைய அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தினேன் என ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 3, 2021, 14:33 [IST]
Other articles published on Sep 3, 2021
English summary
Shardul Thakur open's up about is Smashes in 1st innings of oval test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+