Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘புதிய விஷயம் வருகிறது’.. 4வது டெஸ்ட் போட்டியில் சஸ்பன்ஸ்.. ரவி சாஸ்திரி விடுத்த எச்சரிக்கை!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்த சூழலில் இன்று 4வது டெஸ்ட் போட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கவுள்ளது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. 3வது டெஸ்டில் இந்திய அணியை, இங்கிலாந்து பவுலர்கள் புரட்டிப்போட்டது தான் தற்போது வரை இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. குறிப்பாக கடந்த 3 டெஸ்ட் போட்டியிலுமே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாக உள்ளதால், ஓவல் டெஸ்டிலும் தோல்வியே கிடைக்க வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

நம்பிக்கை வார்த்தைகள்

நம்பிக்கை வார்த்தைகள்

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், 4வது டெஸ்ட் போட்டியில் சுலபமாக வெல்லலாம். இந்திய வீரர்கள் 3வது டெஸ்ட் போட்டியை மறந்துவிட வேண்டும். நல்ல விஷயங்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். லார்ட்ஸ் டெஸ்டை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த போட்டியில் இங்கிலாந்து அணிதான் வெற்றிக்கு அருகில் இருந்தனர். பின்னர் அவர்களை வீழ்த்தினோம். எனவே அந்த நம்பிக்கையை நியாபகம் வைத்திருங்கள்.

கம்பேக் கொடுப்பார்கள்

கம்பேக் கொடுப்பார்கள்

வாய் வார்த்தையில் சொல்வது எல்லாம் சுலபமாக தான் இருக்கும் என்பதை நானும் அறிவேன். ஆனால் விளையாட்டு போட்டிகளில் தோல்விகள் சகஜம். ஆனால் அதை மறக்க வேண்டும். 3வது டெஸ்ட் போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி பேட்டிங் வரிசையை வீழ்த்திவிட்டனர். இங்கிலாந்தின் பவுலிங் சிறப்பாக இருந்தது. அப்படி இருந்த போதே 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கம்பேக் கொடுத்தனர். எனவே புதிதாக தொடங்கும் போட்டியில் நிச்சயம் பெரிய கம்பேக் கொடுப்பார்கள்.

சாஸ்திரியின் எச்சரிக்கை

சாஸ்திரியின் எச்சரிக்கை

மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி அவ்வளவு தான், கதை முடிந்தது என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்களுக்காக புதிய விஷயம் ஒன்று வரவுள்ளது. ஏனென்றால் இந்த தொடர் தற்போது 1- 1 என சமநிலையில் உள்ளது. போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் நடக்கிறது. இதில் தோல்வியடைந்தால் அவர்களுக்கு அவமானம். எனவே இங்கிலாந்து அணிக்கு தான் அதிக பிரஷர் உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்துவிட்டோம். ஆகையால், தற்போது ஆட்டம் அவர்களின் மண்ணில், நாங்கள் போராடுவோம், ஆனால் அழுத்தம் அவர்களுக்குதான் என்பதை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 2, 2021, 10:30 [IST]
Other articles published on Sep 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+