Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் ஜெயிச்சிட்டா மட்டும் போதும்.. வெற்றி சுலபமாக கிடைக்கும்.. ஓவலில் உள்ள சுவாரஸ்ய விஷயம் - விவரம்

லண்டன்: 4வது டெஸ்ட் போட்டியில் எந்த அணி டாஸை வெல்கிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறும் என்ற சூழல் ஓவல் மைதானத்தில் உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை முதல் தொடங்கவுள்ளது.

ஓவல் பிட்ச் ரிப்போர்ட்

ஓவல் பிட்ச் ரிப்போர்ட்

இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் பிட்ச் அமைந்திருந்தது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த சூழலில், பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. ஆனால் 4வது டெஸ்ட் போட்டியில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

 ஓவல் மைதான சூழல்

ஓவல் மைதான சூழல்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் டாஸில் வெற்றி பெறும் அணியே போட்டியை வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் டாஸில் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவிக்கும். நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் ரன்கள் எடுக்க கடினமாக இருக்கும் என்றும் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

காரணம் என்ன

காரணம் என்ன

எனவே முதலில் டாஸ் வெற்றி பெறும் அணி ரன்களை அதிகப்படியாக குவித்துவிட்டால், 2வதாக பேட்டிங் செய்யும் அணி குறைந்த ஸ்கோரிலேயே சுருண்டுவிடும். இதனால் இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஓவல் மைதான வானிலையும் பேட்டிங்கிற்கு சற்று எதிராக உள்ளதாக தெரிகிறது.

 புள்ளி விவரம்

புள்ளி விவரம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 13 முறை லண்டன் ஓவல் மைதானத்தில் மோதியுள்ளது. இதில் 5 முறை இங்கிலாந்து அணியும், ஒரே ஒரு முறை இந்திய அணியும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்திய அணி இங்கு கடைசியாக விளையாடிய 3 டெஸ்டுகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், ஒரு போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 1, 2021, 21:47 [IST]
Other articles published on Sep 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+