Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘விதிமுறை மீறல்’ இங்கிலாந்து பேட்ஸ்மேனின் தவறான செயல்.. மைதானத்தில் கோலி கடும் வாக்குவாதம் - வீடியோ

லண்டன்: 4வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் செய்த தவறை தட்டிக்கேட்பதற்காக கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

புது பிரச்னை

புது பிரச்னை

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணி வீரர்களுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா - ஆண்டர்சனுக்கு இடையே ஏற்பட்ட தகராறு 3வது டெஸ்டில் அணி பிரச்னையாக மாறியது. எனவே 4வது போட்டியில் இரு அணிகளும் எந்தவித சண்டையும் இன்றி அமைதியான முறையில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் செய்த விஷயம் ஒன்று மீண்டும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

முதல் நாள் ஆட்டத்தின் போதே இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து, பின்னர் இங்கிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்கினர். ஆட்டத்தின் 7வது ஓவரின் போது இங்கிலாந்து தொடக்க வீரராக ஹசீத் ஹமீத் கள்மிறங்கினார். அப்போது அவர் 'கார்டு' ( Gaurd) எடுத்துக்கொண்ட விதம் தான் கோலியை சூடாக்கியுள்ளது. ஏனென்றால் அவர் ஸ்டம்புகளுக்கு நீண்ட தூரத்தில் கார்டு எடுத்தார்.

விதிமுறை

விதிமுறை

பேட்ஸ்மேன்கள் களத்திற்குள் வரும்போது முதலில் ஸ்டம்புகளுக்கு அருகாமையில் கார்டு எடுத்துக்கொள்வார்கள். அதாவது காலை வைத்து பிட்ச்-ல் கோடு போட்டுக்கொள்வார்கள். அவர்கள் ஸ்டம்புகளில் இருந்து 5 அடிக்குள்ளாக தான் போட வேண்டும் என்பது தான் விதிமுறை. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஹசீப் நீண்ட தூரத்தில் போட்டார். இதனை பார்த்த கோலி கடும் கோபம் அடைந்தார்.

வைரல் வீடியோ

நேரடியாக நடுவர்களிடம் சென்று ஹசீப்பின் தவறான செயல் குறித்து முறையிட்டார். அதனை நடுவர்கள் விசாரிக்க சிறிது நேரம் கோலி - நடுவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஏனென்றால், இந்திய அணி பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பண்ட்-க்கும் இதே விதிமுறையை கூறி நடுவர்கள் எச்சரித்தனர். இதுதான் கோலியின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹசீப் ஹமீத்

ஹசீப் ஹமீத்

எனினும் ஹசீப்பின் ஆட்டத்தை பும்ரா நீண்ட நேரம் நீடிக்க விடவில்லை. 12 பந்துகளை சந்தித்த அவர் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்தியாவுக்கு பெரும் நிம்மதி கிடைத்தது. டாப் ஆர்டரில் 3 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால், அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.

Story first published: Friday, September 3, 2021, 17:18 [IST]
Other articles published on Sep 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+