இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட்.. எட்பாஸ்டனில் தொடரும் ஆசிய சோதனை!
பர்மிங்காம் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் இருந்து சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ :
1. 0 வெற்றிகள் : போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆசியா கண்டத்தை சேர்ந்த அணிகள் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. இந்திய அணி இங்கு 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும் 1 போட்டியில் ட்ராவும் செய்துள்ளது.
2. 31 ரன்கள் வித்தியாசம் - இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியது தழுவியது. குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற நான்காவது தோல்வி இதுவாகும். இதற்கு முன்னதாக 12 ரன்கள் மற்றும் 16 ரன்கள்(இரு முறை) தோல்வியை தழுவியுள்ளது.

3. 6 ஆவது வீரர் கோஹ்லி - இந்திய அணியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோஹ்லி அடித்த ரன்கள் 149 மற்றும் 51. அதற்கு அடுத்த அதிகபட்ச ரன் ஹார்டிக் பாண்டியாவின் 31 ஆகும். இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது ஆறாவது முறையாகும். அதாவது ஒரு இன்னிங்சில் மற்ற வீரர்கள் 49 ரன்களுக்கு குறைவாக எடுத்து ஒரு வீரர் மட்டுமே அதிக ரன்களை எடுப்பது.
4. 45.87% ரன்கள் - இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மொத்தம் 200 ரன்களை அடித்துள்ளார். இந்திய அணியின் மொத்த ரன்கள் 436 மட்டுமே.அதாவது 45.87% ரன்களை தனி ஒருவனாக அடித்துள்ளார். இது ஒரு புதிய சாதனையாகும். இதற்கு முன்னால் கவாஸ்கர் அடித்த 43.71% அதிகமாகும்.
5. 200 ரன்கள் - இந்திய கேப்டன் இங்கிலாந்து அணிக்கெதிராக எடுத்த இரண்டாவது அதிக பட்ச ரன்கள். இதற்கு முன்னால் பட்டோடி எடுத்த 212 ரன்களே சாதனையாகும்.
6. 194 ரன்கள் - வெற்றி இலக்கமான 194 ரன்கள் என்பது சமீபத்தில் இந்திய அணி எடுக்கமுடியாமல் தோல்வியடைந்த மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி இதுவரை மூன்று முறை குறைந்த இலக்கங்களை எடுக்கமுடியாமல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது கடந்த மூன்று ஆண்டுகளில்.
Story first published: Sunday, August 5, 2018, 15:01 [IST]
Other articles published on Aug 5, 2018


Click it and Unblock the Notifications