Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டம் காட்டிய ஜடேஜா..வலுவான இங்கிலாந்து.. 5வது டெஸ்டில் இந்தியா தாக்குப் பிடிக்குமா?

லண்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

நேற்று முக்கியமாக தன் முதல் போட்டியில் ஆடிய ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தார். தன் இடத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜடேஜா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நேற்று 86 ரன்கள் குவித்தார்.

எனினும், இங்கிலாந்தின் கைகள் தான் ஓங்கி உள்ளது. தற்போதைய நிலையில், இங்கிலாந்து தன் இரண்டாம் இன்னிங்க்ஸில் வலுவான முன்னிலையை நோக்கி முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

கைகொடுத்த விஹாரி

கைகொடுத்த விஹாரி

நேற்று இந்தியா 174 ரன்களுக்கு ஆறு விக்கெட்கள் இழந்து இருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கியது. ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். தன் முதல் போட்டியில் ஹனுமா என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அரைசதம் அடித்து தனக்கு அளித்த வாய்ப்பை நியாயப்படுத்தினார்.

ஆட்டம் காட்டிய ஜடேஜா

ஆட்டம் காட்டிய ஜடேஜா

ஜடேஜா பந்துவீச்சில் கெட்டி என்றாலும் பேட்டிங்கில் சில சமயம் மட்டுமே கைகொடுப்பார். ஆனால், நேற்று அவர் ஆடிய விதம் அருமையாக இருந்தது. விஹாரி அரைசதம் அடித்து மொயீன் அலி பந்தில் 56 ரன்களுக்கு வெளியேறிய நிலையில், ஜடேஜா பின்வரிசை வீரர்களோடு இணைந்து ரன் குவித்தார். அரை சதம் கடந்து ஆடினார்.

பும்ராவுடன் மினி கூட்டணி

பும்ராவுடன் மினி கூட்டணி

இஷாந்த் சர்மா, முஹம்மது ஷமி விரைவில் வெளியேற, இந்தியா சுமார் எழுபது ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. கடைசி விக்கெட்டுக்கு பும்ரா, ஜடேஜா இணைந்தனர். பும்ரா ரன் அடிக்க முயலாமல், விக்கெட் இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தினார். ஜடேஜா மறுபுறம் விரைவாக ரன் குவிக்க, இந்த இணை 32 ரன்கள் எடுத்தது. பும்ரா எந்த ரன்னும் எடுக்காமல் வெளியேற, இந்தியா 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மீண்டும் அலஸ்டர் குக்

மீண்டும் அலஸ்டர் குக்

இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலையில் ஆட்டத்தை துவங்கியது. ஜென்னிங்க்ஸ் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 20 ரன்களுக்கு வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 62 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து இருந்தது. அடுத்து கேப்டன் ஜோ ரூட், மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தன் இறுதி இன்னிங்க்ஸில் ஆடி வரும் குக் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். குக் ஆமை வேகத்தில் ரன் குவித்தார். இந்த இணை 52 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து 114 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்துள்ளது. குக் 46, ரூட் 29 ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர். இந்தியா தற்போது 154 ரன்கள் பின்தங்கி உள்ளது.

இங்கிலாந்து இன்னும் நூறு ரன்கள் சேர்ப்பதற்குள் அவர்களை ஆட்டமிழக்கச் செய்தால் இந்தியா வெல்ல வாய்ப்புள்ளது.

Story first published: Monday, September 10, 2018, 11:58 [IST]
Other articles published on Sep 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+