
5வது டெஸ்ட்
இரு அணிகளும் மோதும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று தொடங்கவுள்ள இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விட்டால் தொடரை கைப்பற்றிவிடும். தோற்றுவிட்டாலும் தொடர் சமனிலை அடைந்து இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தொடரை இழக்கக்கூடாது என்ற கட்டாயத்தில் உள்ளது. எனவே வெற்றி பெற கடுமையாக முணைப்பு காட்டுவார்கள் என்பதால் 5வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

வானிலை
இந்நிலையில் மான்செஸ்டர் போட்டிக்கான வானிலை மற்றும் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மான்செஸ்டர் நகரை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் முதல் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஆட்டத்தின் முதல் நாளன்று மழையின் குறுக்கீடு இருப்பதாக தெரிகிறது. 4வது மற்றும் 5வது நாளன்று ஓரளவிற்கு வெயில் இருக்கும் என்றும், மழைக்கான வாய்ப்பு குறைந்த அளவிலேயே இருக்கும் எனத்தெரிகிறது.

பிட்ச்
இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் சாதகமாக விளங்கும் பிட்ச்-களில் மான்செஸ்டரும் முக்கியமானது. மழை குறுக்கீடுக்கு வாய்ப்புள்ளதால் நிச்சயம் பந்தில் ஸ்விங் இருக்கும். எனவே வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இங்கு பெரியளவில் தேவைப்படுவார்கள். 4 மற்றும் 5வது நாளில் மட்டும் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவிற்கு தேவைப்படலாம்.

இந்திய அணிக்கு சாதகம்
இந்திய அணி ஏற்கனவே 4 போட்டிகளில் விளையாடி ஓரளவிற்கு இங்கிலாந்தின் தன்மையை உணர்ந்துள்ளது. அதிலும் உமேஷ்யாதவ், ஷர்துல் தாக்கூர் என வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டு வந்திருப்பது மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











