For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1000 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா.. சரித்திர சாதனை படைத்த இந்திய கேப்டன்.. தோனி வரிசையில் ரெக்கார்டு

தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் பல சாதனைகளை உடைத்து அசர வைத்து இருக்கிறார். உலகிலேயே ஐந்து கேப்டன்கள் மட்டுமே செய்த சாதனைப் பட்டியலில் ஆறாவதாக இணைந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வழக்கம் போல முதலில் அதிக ரன் குவித்த போதும் கடைசியில் 43 ரன்கள் சேர்க்க 7 விக்கெட்களை பறி கொடுத்தது. 175 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி.

India vs England 5th Test Rohit Sharma scored 1000 runs as captainin test matches

அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடரிலேயே தங்களின் சிறந்த துவக்கத்தை அளித்தனர். இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா முதல் நாளின் முடிவு வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்து இருந்தார். அவர் இத்துடன் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மேலும், ஒருநாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக 1000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், 1000 ரன்களை கடந்த இந்திய டெஸ்ட் கேப்டன்கள் வரிசையில் 10வது இடத்தையும் பிடித்தார்.

அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் கேப்டனாக 1000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் :

எம்எஸ் தோனி

விராட் கோலி

கேன் வில்லியம்சன்

ஃபாஃப் டு பிளெசிஸ்

பாபர் அசாம்

ரோஹித் சர்மா

கேப்டனாக 1000-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களை எடுத்த இந்தியர்களின் பட்டியல் :

விராட் கோலி - 5,864 ரன்கள்

எம்எஸ் தோனி - 3,454 ரன்கள்

சுனில் கவாஸ்கர் - 3,449 ரன்கள்

முகமது அசாருதீன் - 2,856 ரன்கள்

சவுரவ் கங்குலி - 2,561 ரன்கள்

எம்ஏகே பட்டோடி - 2,424 ரன்கள்

சச்சின் டெண்டுல்கர் - 2,054 ரன்கள்

ராகுல் டிராவிட் - 1,736 ரன்கள்

கபில்தேவ் - 1,364 ரன்கள்

ரோஹித் சர்மா - 1,039 ரன்கள்

Story first published: Friday, March 8, 2024, 8:37 [IST]
Other articles published on Mar 8, 2024
English summary
India vs England 5th Test : Rohit Sharma scored 1000 runs as captainin test matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+