Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘அஸ்வின் தேவையே இல்லை’.. திடீர் பல்டி அடித்த முன்னாள் வீரர்.. காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள்!

லண்டன்: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அஸ்வினை இணைக்க வேண்டும் என குரல்கள் வலுத்து வரும் சூழலில் ஆகாஷ் சோப்ரா அவர் தேவையில்லை எனக்கூறியுள்ளார்.

Recommended Video

Aakash Chopra opines on India's bowling composition for 3rd Test | Oneindia Tamil

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில், யாருமே எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது.

2வது இன்னிங்ஸில் பும்ரா - முகமது ஷமி ஜோடி இணைந்து சேர்த்த 89 ரன்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இங்கிலாந்துக்கு எதிராக திருப்பியது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியை தழுவினர் என இங்கிலாந்து வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்களே கடும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக டெயில் எண்டர்ஸை கூட சமாளிக்க முடியாததற்கு ஜோ ரூட்டின் கேப்டன்சியை பெரிதும் குறைக்கூறி வருகின்றது. எனவே இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியில் எப்படியவது வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து முடிவுடன் உள்ளது. இதற்காக முக்கியமான 4 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் ப்ளேயிங் 11

இந்தியாவின் ப்ளேயிங் 11

இந்நிலையில் அதனை எதிர்க்கும் வகையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அனைத்து வீரர்களுமே ஓரளவிற்கு பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். ஆனால் பந்துவீச்சில் தான் மீண்டும் அஸ்வினை சேர்ப்பது தொடர்பான குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அஸ்வின்

அஸ்வின்

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சரி செய்துவிட்டார். மேலும் அவர் விக்கெட் எடுக்காததும் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சிராஜ், ஷமி, பும்ரா, இஷாந்த் என 4 வேகப்பந்துவீச்சாளர்களுமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தனர்.

ஆகாஷ் சோப்ரா

ஆகாஷ் சோப்ரா

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆகாஷ் சோப்ரா மட்டும் அதற்கு மாறான கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்பின்னர்களை விளையாட வைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கு ஸ்பின்னிங் பெரியளவில் உதவவில்லை. எனவே அடுத்த டெஸ்டிலும் நிச்சயம் ஸ்பின்னிங்கிற்கு உதவாது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஜடேஜா முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் எடுக்கவில்லை தான். ஆனால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜடேஜா விக்கெட் எடுக்காதது இந்தியாவின் வெற்றிக்கு பாதிப்பு கொடுக்கவில்லை என்ற சூழல் இருக்கும் போது அஸ்வினை எங்கு விளையாட வைக்க முடியும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 19, 2021, 18:51 [IST]
Other articles published on Aug 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+