Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரஹானே.. 100 டெஸ்ட் விளையாடுவேன் என்று சூளுரை

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் என்று அறியப்பட்ட ரஹானே தற்போது அணியில் இடமே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவர் கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார்.

ரஹானே கேப்டனாக இருந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவில் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார்.அணியில் இருந்து இடத்தை இழந்தவுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி அணிக்கு சென்றார்.

India vs england- Ajinkya Rahane vows to Play 100th test match for india


எனினும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். 35 வயதான ரகானே தற்போது 85 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது மும்பை அணியின் கேப்டனாக ரஞ்சி கோப்பை தொடரில் அவர் இருக்கிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகானே என்னுடைய குறிக்கோள் நடப்பாண்டில் ரஞ்சி கோப்பையையும் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பது மட்டும்தான். தற்போது மும்பை அணிக்காக நான் நன்றாக செயல்பட வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறேன்.

ஒரு சமயத்திற்கு ஒரு போட்டி என்ற பாணியில் தான் நான் உழைத்து வருகிறேன். மும்பை அணிக்கு நடப்பு ரஞ்சி தொடரில் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. எனினும் இந்த தொடரில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக செயல்பட வேண்டும். எந்த அணி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே மாதிரி சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

தற்போது ரஞ்சி போட்டியில் சொந்த மண்ணில் ஒரு போட்டி வெளியே ஒரு போட்டி என நடைபெற்று வருகிறது. இதனால் ஆடுகளம் சூழல் மாறிக்கொண்டே இருக்கும். எனவே ஒவ்வொரு போட்டியிலும் எந்த மாதிரி சூழல் இருக்கிறது என்பதை பார்த்து நாம் செயல்பட வேண்டும் என்று ரஹானே கூறியுள்ளார். இதனிடையே, புஜாரா தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்துள்ள நிலையிலும் அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, January 16, 2024, 18:49 [IST]
Other articles published on Jan 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+