For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சின்னப்புள்ள தனமா இல்லையா??”.. கோலி - ரோகித்திற்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.. நீக்குவதற்கு முடிவ

மும்பை: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இந்திய அணி கடந்த 3 - 4 மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே இல்லை. எனவே 15 நாட்களுக்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போன்று பயிற்சி போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சி நிகழ்வு

அதிர்ச்சி நிகழ்வு

இந்த சூழலில் தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அஸ்வினுக்கு கொரோனா உறுதியானதால், அவர் இங்கிலாந்துக்கு செல்லவில்லை. இதே போல முன்னணி வீரர் விராட் கோலிக்கு ஓய்வு நாட்களின் போது கொரோனா உறுதியானதாகவும், பின்னர் குணமடைந்து வந்திருப்பதாகவும் கூறியதால், கொரோனா பிரச்சினை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

பிசிசிஐ கடும் அதிருப்தி

பிசிசிஐ கடும் அதிருப்தி

இந்நிலையில் ரோகித், கோலி மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது. இங்கிலாந்து தொடரில் பயோ பபுள் விதிமுறை இல்லை என்பதால், ரோஹித், கோலி இருவரும் இங்கிலாந்து வீதிகளில் வலம் வந்தனர். மேலும் முகக்கவசம் அணியாத ரசிகர்களுடன் நெருங்கி நின்று புகைப்படங்களும் எடுத்துக்கொண்டதால், கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

வீடியோ கால்

வீடியோ கால்

இதற்காக அவர்கள் இருவருடனும், பிசிசிஐ அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளனர். விதிமுறை இல்லையென்றாலும், இவ்வளவு அஜாக்கிரதையாக இருப்பதை ஏற்க முடியாது. உங்களுக்கு கொரோனா அறிகுறியோ அல்லது உடல்நிலையில் சிறிய மாற்றம் வந்தாலும் உடனே தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, June 22, 2022, 17:00 [IST]
Other articles published on Jun 22, 2022
English summary
BCCI warning to Rohit sharma and virat kohli ( இந்தியா vs இங்கிலாந்து போட்டி ) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+