For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG : 3 பார்ட் பிட்ச்.. முதல் டெஸ்ட்டில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்.. உஷாரான இங்கிலாந்து

ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பிட்ச் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதான பிட்ச் ஸ்பின்னர்களுக்கும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இது எப்படி சாத்தியம்? அதாவது பிட்ச்சின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பிரிவுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பக்க பேட்டிங் முனையில் ஸ்டம்ப்புகளுக்கு அருகே பிட்ச் காய்ந்து போய் உள்ளது. பந்துவீச்சாளர் அந்த இடத்தில் பிட்ச் செய்தால் அது அந்த முனையில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமையும்.

india-vs-england-bcci-made-hyderabad-pitch-in-three-parts-to-support-batsman-and-bowler

மறுமுனையில் காய்ந்த பகுதிகள் குறைவாக இருக்கிறது. அது வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக அமையும். நடுப்பகுதியில் புற்கள் இருக்கின்றன. அதே சமயம், அடியில் பிட்ச் காய்ந்து இருக்கிறது. அது ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த நடுப்படுதியில் தான் பெரும்பாலும் பந்து பிட்ச் ஆகும் என்பதால் இந்தப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு வேலை அதிகம். அதே சமயம், ஒரு முனையில் காய்ந்த பகுதி குறைவாக இருப்பதால் வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் இரண்டு நாட்கள் அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தலாம்.

பொதுவாக இந்திய பிட்ச்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும். அதனாலேயே இந்தியா தனக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்கிறது என குற்றச்சாட்டும் சுமத்தப்படும். ஆனால், பிசிசிஐ இந்த முறை முதல் டெஸ்ட்டிலேயே அப்படி ஒரு பெயரை எடுத்து விடக் கூடாது என முடிவு செய்து அனைத்து தரப்புக்கும் சாதகங்கள் உள்ள பிட்ச்சை தயார் செய்து இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பிட்ச் அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 25, 2024, 10:04 [IST]
Other articles published on Jan 25, 2024
English summary
India vs England : BCCI made Hyderabad pitch in three parts to support batsman and bowler
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+