ஹைதராபாத் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் கீப்பிங் செய்த போது தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் சிரிப்பலையை வரவழைத்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. ரோஹித் சர்மா- ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம், அளித்து ஆடினர். இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய திணறிய நிலையில் இந்த ஜோடி 10 ஓவர்களில் எல்லாம் 68 ரன்களை கடந்து டி20 வேகத்தில் ரன் குவித்தது. இந்த நிலையில், தான் பென் ஃபோக்ஸ் செய்த சொதப்பல் சம்பவம் நடந்தது.

ரோஹித் சர்மா பந்தை அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார். ஃபீல்டர் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ்-இடம் வீசினார். ஆனால், பந்து சற்று திசை மாறி சென்றது. அதனால் பந்தை பிடிக்க வேண்டி தான் நின்ற இடத்தில் இருந்து பந்தை பார்த்துக் கொண்டே முன்னேறி சென்றார் ஃபோக்ஸ். ஆனால், தனக்கு முன்னால் இருந்த ஸ்டம்ப்புகளை அவர் பார்க்கவில்லை. இதை அடுத்து அவர் மூன்று ஸ்டம்ப்புகளின் மீதும் விழுந்தார். ஸ்டம்ப்புகள் அவர் தடுக்கி விழுந்த வேகத்தில் பறந்தன. இதைப் பார்த்து இங்கிலாந்து வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் சிரித்தனர்.
அப்போது ரன் வுட் செய்யும் வாய்ப்பு கூட குறைவாகவே இருந்தது. ரோஹித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் ஒரு ரன் ஓடியதோடு நின்று விட்டனர். அதனால், பந்தை அவர் விட்டு, விட்டு ஓடிச் சென்று கூட பிடித்து இருக்கலாம். ஆனால், ரன் அவுட் செய்வது போன்ற ஒரு வேகத்தில் அவர் இப்படி செய்தார்.
அதன் பின் ரோஹித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி 70 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்து இருந்தது.