For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி எடுத்த தைரியமான முடிவு.. ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து.. 5வது டெஸ்ட் ரத்தானதற்கு உண்மையான காரணம்!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் விராட் கோலி செய்தும் அதனை இங்கிலாந்து வாரியம் ஏற்காதது தெரியவந்துள்ளது.

Recommended Video

Chahal T20 Squad-ல் நீக்கப்பட்டதற்கு இதான் காரணம்.. விளக்கம் கொடுத்த தேர்வாளர்கள்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி நேற்று தொடங்கவிருந்தது.

மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருந்த இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

5வது டெஸ்ட்

5வது டெஸ்ட்

இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அணி வீரர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனினும் போட்டியை நடத்துவதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஆலோசனை

ஆலோசனை

பிசிசிஐ - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நீண்ட நேரமாக பரபரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 - 1 என தொடரில் முன்னிலை வகிப்பதால், அவர்கள் தான் வெற்றி என ஒருபுறம் கூற, மற்றொரு புறம், இந்தியா தானாக முன்வந்து வெளியேறுவதால், இங்கிலாந்து தான் வெற்றியாளர்கள் என்றும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இந்த தொடரை முடிவு எட்டப்படாமல் நிறுத்திக்கொள்வதாகவும், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வேறு ஒருநாள் திட்டமிட்டு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு இரு நாட்டு வாரியங்களும் ஒப்புதல் வழங்கின.

பரவும் விமர்சனங்கள்

பரவும் விமர்சனங்கள்

ஐபிஎல் தொடரை முக்கியமாக கருதி, சர்வதேச போட்டியை பிசிசிஐ கைவிடுவதாக விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த போட்டியை எப்படியாவது நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதற்காக கேப்டன் விராட் கோலி போராடியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அவர் போட்டியை 2 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு, தாமதமாக கூட நடத்துவதற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கோலியின் செயல்பாடு

கோலியின் செயல்பாடு

பிசிசிஐ- யை தொடர்பு கொண்டு பேசியுள்ள கேப்டன் கோலி இந்திய அணியில் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. எனவே 2 நாட்கள் மட்டும் ஒத்திவைத்துவிட்டு, போட்டியை ஞாயிற்று கிழமை கூட தொடங்கலாம் எனக்கூறியுள்ளார். இதற்கு பிசிசிஐ-ம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த முடிவினை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் விராட் கோலி பகிர்ந்துள்ளார். ஆனால் அதற்கு பச்சைக்கொடி கிடைக்கவில்லை.

இங்கிலாந்து திட்டவட்டம்

இங்கிலாந்து திட்டவட்டம்

போட்டியை நடத்துவது என்றால், தற்போதே நடத்த வேண்டும், இல்லையென்றால் வேறு ஏதாவது ஒருநாளில் நடத்திக்கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் டெஸ்ட் போட்டி முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காத்திருக்க வேண்டும்

காத்திருக்க வேண்டும்

கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த 2 மாதங்களில் நடத்த வாய்ப்பே இல்லை. ஏனென்றால் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதே போல அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. எனவே டிசம்பர் மாதத்தில் வேண்டுமானாலும் மீதமுள்ள டெஸ்ட் போட்டியை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை முடிவுக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Story first published: Saturday, September 11, 2021, 17:04 [IST]
Other articles published on Sep 11, 2021
English summary
ECB Refused Skipper Virat kohli’s request for a delayed start of the Manchester Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+