Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடுதலை ஆனார் ஜார்வோ.. 5வது டெஸ்டில் குறுக்கிடுவதற்கு ரெடி.. என்ன திட்டம் வைத்துள்ளாரோ?

லண்டன்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்வோ நேற்று விடுதலை ஆகியுள்ளார். 5வது டெஸ்ட் போட்டியில் என்ன செய்யலாம் என அவர் திட்டமிடும் பதிவு வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளை தாண்டி அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் ஜார்வோ என்ற நபரை பற்றி தான்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக ஃபாலோ செய்து வரும் ரசிகர்களுக்கு இந்த பெயர் நிச்சயம் தெரியாமல் இருக்காது.

இங்கிலாந்து ரசிகர் ஜார்வோவின் அட்டகாசம் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து வருகிறது.

பிராங்க்

பிராங்க்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த ஜார்வோ, பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்தார். அதனை கண்ட அம்பயர்கள் மைதான ஊழியர்கள் உதவியுடன் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். பக்காவான ஒரு இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதில், லோகோ, ஸ்பான்சர்ஸ் பெயர் என்று அனைத்தும் மிகச் சரியாக இருந்தது. ஜெர்ஸிக்கு பின்னால் ஒரு எண்ணும், அவரது பெயரும் (jarvo) இருந்தது. ஒரு நிமிடத்தில் அவரும் ஒரு வீரர் தான் என ரசிகர்கள் நம்பிவிட்டனர்.

ஹெட்டிங்லியிலும் ஜார்வோ

ஹெட்டிங்லியிலும் ஜார்வோ

அவர் லார்ட்ஸை தொடர்ந்து ஹெட்டிங்லி மற்றும் ஓவல் டெஸ்டிலும் ஜார்வோ தனது சேட்டையை செய்தார். ஹெட்டிங்லே மைதானத்திற்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைவதற்கு ஜார்வோவுக்கு தடை விதித்தது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்தான், தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்தது. இத்தோடு சேட்டை ஓய்ந்துவிட்டது என்று பார்த்தால், ஓவல் மைதானத்தில் நுழைந்து பந்துவீச முயன்றார் ஜார்வோ.

ஓவல் மைதானம்

ஓவல் மைதானம்

இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பந்துவீசுவது போல் ஓடி வந்த ஜார்வோ பேர்ஸ்டோ மீது வேகமாக மோதிவிட அவர் பதறிவிட்டார். அதன் பிறகு வழக்கம் போல், பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்க இங்கிலாந்து காவல்துறை, ஜார்வோவை தற்போது கைது செய்திருந்தது.

ஜார்வோ விடுதலை

ஜார்வோ விடுதலை

இந்நிலையில் ஜார்வோ நேற்று சிறையில் இருந்து வெளியாகியுள்ளார். இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளில் குறுக்கீடு செய்து வேடிக்கையை ஏற்படுத்தி வந்த ஜார்வோ இத்துடன் அதனை மூட்டைக்கட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அடங்குவதாக இல்லை. சிறையில் இருந்து வெளியேறும் போது கூட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 5வது டெஸ்ட் போட்டியில் என்ன செய்யலாம் என யோசிப்பது போல பதிவிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

தொடக்கத்தில் ஜார்வோவின் செயலை பார்த்து சிரித்து வந்த ரசிகர்கள் தற்போது அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அந்த அளவிற்கு அவரின் சேட்டை எல்லை மீறியுள்ளது. எனவே 5வது டெஸ்ட் போட்டியில் அவர் மட்டும் குறுக்கீடு செய்தால், நிச்சயம் கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, September 7, 2021, 20:18 [IST]
Other articles published on Sep 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+