Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு? விடைபெறும் போதும் கோலிதான் டார்கெட்.. நீண்ட நாள் பகைக்கு முற்றுப்புள்ளி!

லண்டன்: இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என சமநிலையில் உள்ளன.

முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய படுமோசமாக தோல்வியடைந்தது.

இந்திய டெஸ்ட் தொடர்

இந்திய டெஸ்ட் தொடர்

இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் ஆட்ட நாயகனாக விளங்கி வருபவர் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த தொடரில் பிரச்னையானாலும் சரி, சாதனை என்றாலும் சரி, முதலில் வருவது ஆண்டர்சனின் பெயராக தான் உள்ளது. இங்கிலாந்து அணியின் தூணாக இருக்கக்கூடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் அனுபவம்

கிரிக்கெட் அனுபவம்

39 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்த 2 வீரர்களில் ஒருவராக உள்ளார். மற்றொரு வீரராக ஸ்டூவர்ட் பிராட் உள்ளார். இவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே பங்கேற்று வருகிறார். அவரின் வயதிற்கும், அவரின் திறணுக்கும் அனைவரும் ஆச்சரியத்துடன் உள்ளனர்.

ஆண்டர்சன் ஓய்வு

ஆண்டர்சன் ஓய்வு

இந்நிலையில் இவர் இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன், இந்திய அணியுடனான போட்டியை போன்று, அடுத்து வரும் ஆஷஸ் தொடர் சுவாரஸ்யமாக இருக்குமா என்பது தெரியாது. ஆனால் ஆண்டர்சன் இந்திய தொடரை தான் முக்கியமாக பார்க்கிறார்.

என்ன காரணம்

என்ன காரணம்

அவர், எனக்கு இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்து, அதில் நான் சிறப்பாக செயல்பட்டுவிட்டால் அதுதான் என்னுடைய கடைசி டெஸ்டாக இருக்கும். ஏனென்றால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை என் மூலமாக இங்கிலாந்து அணி வீழ்த்துவதுதான், எனது கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வருவதற்கு மிகச்சிறப்பான விஷயமாக இருக்கும் என ஆண்டர்சன் யோசிப்பார் என ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ளார். இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, August 31, 2021, 19:39 [IST]
Other articles published on Aug 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+