Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்பராஸ் கானுக்கு ரசிகர்களால் நேர்ந்த கதி.. காப்பாற்றிய பத்திரிகையாளர்.. பதிலடி தருவாரா?

Sarfaraz khan : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தன்னுடைய 26 ஆவது வயதில் நட்சத்திர வீரர் சர்பராஸ்கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இரண்டு முறை அண்டர் 19 கிரிக்கெட் ரஞ்சி கோப்பையில் அதிரடி சதம், டான் பிராட்மனுக்கு பிறகு அதிக சராசரி, வெளிநாடுகளில் நடைபெற்ற இந்திய ஏ தொடர்களின் அதிரடி சதம் என சர்பிராஸ் கான் தொடர்ந்து பட்டையை கிளப்பினார்.

ஆனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த நிலையில் கே எல் ராகுல் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இல்லாததால் சர்பராஸ்கானுக்கு கடந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது.

India vs England - Fans accusing sarfaraz khan for just one failure due to political reasons

சர்பராஸ் கான் அடிமட்டத்தில் இருந்து வந்த வீரர் என்பதால் அவருடைய அறிமுகப் போட்டி பெரும் அளவில் கொண்டாடப்பட்டது. மேலும் சர்பராஸ் கான், தந்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால் அவரை கமெண்ட்ரிக்கு அழைத்து மரியாதையும் வழங்கப்பட்டது. ஆனால் இது சில தரப்பினரை கோபமடைய செய்தது. பாஜகவை சேர்ந்த சின்கா என்ற நபர் சர்பராஸ்கானுக்கு மட்டும் இவ்வளவு மரியாதை கொடுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் முதல் டெஸ்டில் சர்பராஸ்கான் முதல் இன்னிங்க்ஸில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தார். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 2 ரன்களிலும், ரஜத் பட்டிதார் 17 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களிலும், கில் 38 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆடுகளம் பேட்டிங் செய்யவே மிகவும் கடினமான சூழலாக இருந்தது. இந்த நிலையில் சர்பராஸ் கான் இந்த போட்டியில் தடுமாறினார். எனினும் 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 ரன்கள் சேர்த்தார். இதனால் சர்பராஸ்கான் ஆட்டமிழந்தவுடன், அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. முதல் டெஸ்டில் அவரை பாராட்டியதால் கோபமடைந்த சில தரப்பினர் இதுதான் கிடைத்த வாய்ப்பு என்று அவரை கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கினர்.

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த சர்பராஸ் கானை ஒரு இன்னிங்ஸில் சரியாக விளையாடவில்லை என்பதால் அவரை குற்றவாளி கூண்டில் ஏற்றுவது போல் சில தரப்பினர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் சிலர் மீம்ஸ்களையும் போட்டு அவர் மீதான வன்மத்தை கக்கினர். இந்த நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தாஸி, சர்பராஸ் கானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் எதிர்கால வீரர்களை நாம் கண்டெடுத்து விட்டோம்.

ஜெய்ஸ்வால், சர்பராஸ்கான் ஆகியோர் மூன்றாவது டெஸ்டிலும் தற்போது துருவ் ஜூரலை நான்காவது டெஸ்டிலும் அபாரமாக விளையாட இருக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்ட வேண்டும் என்று கருத்து கூறியிருக்கிறார். இதேபோன்று பலரும் ஆதரவாக கூறியிருக்கிறார்கள். சர்பராஸ் கானை மட்டும் விமர்சிப்பது உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுவதை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ்கான் அவர்களுக்கு பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Sunday, February 25, 2024, 14:04 [IST]
Other articles published on Feb 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+