Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அறிவிப்பு.. எத்தனை போட்டிகள்? தேதிகள்? முழு விபரம் இங்கே!

மும்பை : தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது.

கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்த நிலையில் இது இந்திய அணிக்கு முக்கியமான தொடராக கருதப்படுகிறது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றுள்ளனர். அங்கே ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கி இருந்த பின் இந்தியா ஆடும் முதல் சர்வதேச தொடர்.

தொடர்ந்து போட்டிகள்

தொடர்ந்து போட்டிகள்

ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின் இந்திய அணி இடைவிடாமல் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. லாக்டவுனால் ஆடாமல் விடப்பட்ட கிரிக்கெட் தொடர்களை அனைத்தையும் ஆடி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

இந்தியா வரும் இங்கிலாந்து

இந்தியா வரும் இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா சென்றவுடன் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது இந்திய அணி. இந்தியா வரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் மோத உள்ளது. இந்த தொடர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இங்கிலாந்து செல்லும் இந்தியா

இங்கிலாந்து செல்லும் இந்தியா

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இங்கிலாந்து கிளம்பிச் செல்ல உள்ளது. அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது.

ஐந்து போட்டிகள்

ஐந்து போட்டிகள்

ஆகஸ்ட் 4 அன்று முதல் டெஸ்ட் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்க உள்ளது. ஆகஸ்ட் 12 லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 25, ஹெடிங்க்லே மைதானத்தில் மூன்றாம் டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 2இல் கியா ஓவல் மைதானத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 10இல் ஓல்ட் ட்ராப்போர்டு மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியும் துவங்க உள்ளன.

கடந்த முறை

கடந்த முறை

கடந்த முறை இந்திய அணி 2018இல் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அப்போது ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இந்திய அணி படுதோல்வி அடைந்து இருந்தது. அதை மாற்றும் வகையில் இந்த முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடும் அழுத்தம்

கடும் அழுத்தம்

இந்த முறை இந்தியா வெற்றி பெறாது என்ற பேச்சு இந்த அட்டவணை வெளியான நிமிடத்தில் இருந்தே துவங்கி விட்டது. எனவே, இந்திய அணிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கடும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அனைவரும் 2018 டெஸ்ட் தொடரை ஒப்பிட்டே பேசுவார்கள்.

கிரிக்கெட் தொடர்கள்

கிரிக்கெட் தொடர்கள்

இந்த கடுமையான இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் தொடரிலும், அதன் பின் இலங்கை தொடர், ஆசிய கோப்பை தொடர், ஜிம்பாப்வே தொடர்களில் பங்கேற்க உள்ளது. இடைவிடாமல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது இந்திய அணி.

Story first published: Wednesday, November 18, 2020, 19:00 [IST]
Other articles published on Nov 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+