For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லை.. இவர்தான்.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்

மும்பை : இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் அடுத்த கேப்டனாக வர ஹர்திக் பாண்டியா காய் நகர்த்தி வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்த நிலையில், பிசிசிஐ அதற்கு தற்காலிகமாக ஒரு வேலையை செய்து இருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டியாவை விட நான்கு வீரர்கள் இந்திய அணியில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி அவரது கேப்டன் கனவுக்கு கடிவாளம் போட்டுள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐ ஒப்பந்தத்தை வைத்தே ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டன் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரத்தில் ஒரு தகவல் கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியா இரண்டாம் நிலையான "கிரேடு ஏ" வில் தான் இருக்கிறார்.

India vs England Hardik Pandya won t be Indian team captain

அதே சமயம், அவருக்கு மேலே "கிரேடு ஏ+" இல் நான்கு முக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா. இதன் மூலம் மூத்த வீரர் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமல்ல, ஹர்திக் பாண்டியாவுக்கும் மேல் இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை பிசிசிஐ உணர்த்தி இருக்கிறது.

அதன் மூலம் ஒருவேளை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு உடனடியாக வரக் கூடியவர் பும்ரா அல்லது ஜடேஜா தான் என சொல்லாமல் சொல்லி இருக்கிறது பிசிசிஐ. என்னதான் டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக சில தொடர்களில் செயல்பட்டாலும் டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை பும்ரா தான் துணை கேப்டனாக இருக்கிறார்.

அவரே ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வர தகுதியானவர். அதே போல தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. அதிக அனுபவம் மிக்கவர். எனவே, அவர் டி20 அணி மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக வர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது தற்காலிகமான ஒன்றாகவே இருக்கும். அவருக்கு தற்போது 35 வயதாகும் நிலையில் அவரால் அதிக ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகலாம்.

Story first published: Monday, March 4, 2024, 22:56 [IST]
Other articles published on Mar 4, 2024
English summary
India vs England : Hardik Pandya won't be Indian team captain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+