Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எமனாக விளங்கும் ஓவல்.. வரலாற்றில் ஒரே ஒரு வெற்றிதான்.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

லண்டன்: 4வது டெஸ்ட் போட்டியில் புள்ளி விவரங்களின்படி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரில் முன்னிலை பெற முடியும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முணைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் என பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

இந்நிலையில் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள போட்டிகளின் புள்ளி விவரங்களின்படி இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதற்கு முன்னர் ஓவர்கள் மைதானத்தில் 13 முறை டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடைசி 3 போட்டிகளின் நிலை

கடைசி 3 போட்டிகளின் நிலை

குறிப்பாக அந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியையே சந்தித்துள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்திலும், 2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதே போல 2018ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

 வலுவான நிலை

வலுவான நிலை

புள்ளி விவரங்கள் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தாலும், தற்போதைய ஃபார்மின் படி பார்த்தால், இந்திய அணி தான் தற்போது பலமாக உள்ளது. இங்கிலாந்து அணியில் நட்சத்திர பவுலர்கள் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஆர்ச்சர் ஆகியோர் தொடரில் இருந்து விலகியுள்ளனர். ஒரே ஒரு நம்பிக்கையாக இருந்த ஆண்டர்சனுக்கும் 4வது டெஸ்டில் ஓய்வு அளிக்கபடவுள்ளதாக தெரிகிறது. எனவே இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 1, 2021, 19:13 [IST]
Other articles published on Sep 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+