Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை எப்படி அவுட் ஆக்கப்போறோம்னு தெரியலை... மொயீன் அலி கவலை!

சென்னை : இந்திய கேப்டன் விராட் கோலி அற்புதமான மற்றும் உலக தரத்திலான வீரர் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் எந்த வீக்னசும் இல்லாத நிலையில் வரவுள்ள தொடரில் அவரை எப்படி அவுட் ஆக்கப் போகிறோம் என்பது குறித்து தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் தங்களது அணியில் சிறப்பான பௌலர்கள் உள்ளதால் சிறப்பான பௌலிங்கை அவருக்கு எதிராக அளிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சென்னையில் குவாரன்டைனில் உள்ளனர். தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

மொயீன் அலி பாராட்டு

மொயீன் அலி பாராட்டு

இந்நிலையில் விராட் கோலி அற்புதமான வீரர் என்றும் சர்வதேச அளவில் சிறப்பானவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்வகையில் தன்னை உத்வேகப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கிரிக்இன்ஃபோவிற்காக பேசிய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி அற்புதமான வீரர் என்றும் சர்வதேச அளவில் சிறப்பானவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்வகையில் தன்னை உத்வேகப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கிரிக்இன்ஃபோவிற்காக பேசிய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வீக்னஸ் இல்லாத கோலி

வீக்னஸ் இல்லாத கோலி

வரும் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலியை இங்கிலாந்து அணி எவ்வாறு அவுட் செய்யப் போகிறது என்பது குறித்து தெரியவில்லை என்றும் விராட் கோலிக்கு எந்தவிதமான வீக்னசும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தங்களிடம் சிறப்பான பௌலர்களை கொண்ட பௌலிங் யூனிட் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் குறித்து பேசியதில்லை

கிரிக்கெட் குறித்து பேசியதில்லை

தொடர்ந்து பேசிய அவர், விராட் கோலி மிகவும் சிறப்பான வீரர் என்றும் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் தெரிவித்தார். ஆனாலும் இருவரும் கிரிக்கெட் குறித்து அதிகமாக பேசியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 31, 2021, 14:00 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+