Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. இமாலய சாதனையை நோக்கி ரோஹித் சர்மா படை

தரம்சலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் செய்யப்படாத புதிய வரலாற்று சாதனை ஒன்றை இந்தியா நிகழ்த்தும்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 5 - 0 என கைப்பற்றும் என பலரும் கணித்த நிலையில், இங்கிலாந்து அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

India vs England : If India wins 5th test, it would be a new test series record

ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற அளவில் கைப்பற்றியது. தற்போது ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் இந்தியா வென்றால் டெஸ்ட் தொடரில் 4 - 1 என்ற அளவில் இந்தியா பெரிய வெற்றியை பதிவு செய்யும். அது மட்டுமின்றி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இந்திய அணி செய்யாத புதிய சாதனையை பதிவு செய்யும்.

இதுவரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து விட்டு அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா வென்றதில்லை. அந்த வகையில் இந்தியா அந்த அரிய சாதனையை நிகழ்த்தும். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த மாதிரியான டெஸ்ட் தொடர் வெற்றி மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது.

1897/98 மற்றும் 1901/02ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோற்று விட்டு, பின் நான்கு போட்டிகளையும் வென்று 4 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின் 1911/12இல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே போன்ற சாதனையை செய்தது. அதன் பின் கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு அரிய நிகழ்வு நடைபெறவில்லை. 112 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, February 29, 2024, 10:41 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+