மொயின் அலி பேட்டிங்.. இந்திய அணி கவனிக்காத சிறிய விஷயம்.. பிரச்னையாய் உருவெடுத்தது.. யார் காரணம்?
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கவனித்திடாத சிறிய விஷயம், பெரிய பிரச்னையாக திரும்பியுள்ளது.
Recommended Video
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்கம்
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். 2வது இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களில் அந்த அணியின் ஓப்பனர்களை சாய்த்தார் ஜஸ்பிரித் பும்ரா. ரோரி பேர்ன்ஸ் 5 ரன்களும், ஹசீப் ஹமீத் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.

மிடில் ஆர்டர்
இந்தியாவுக்கு கடந்த 3 போட்டிகளிலும் சதமடித்து தலைவலி கொடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட்டை 21 ரன்களுக்கு வெளியேற்றினார் உமேஷ் யாதவ். இதன் பின்னர் டேவிட் மாலன் 31 ரன்களுக்கும், க்ரெய்க் ஓவர்டன் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 62 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

மீண்ட இங்கிலாந்து
இதன் பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ, மற்றும் ஒல்லி போப் ஆகியோர் அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். இவர்கள் நிலைத்து நின்று பொறுமையாக ஆடுவதற்கு மறுமுணையில் முக்கிய பார்ட்னர்ஷிப் கொடுத்தவர் மொயின் அலி. முக்கியமான நேரத்தில் 35 ரன்கள் எடுத்துக்கொடுத்து உதவினார். மொயின் அலியும், ஒல்லி போப்பும் இணைந்து இந்தியாவுக்கு நீண்ட நேரமாக தலைவலி கொடுத்து வந்தனர். இதனால் ஒல்லி போப் 81 ரன்களை சேர்த்தார். பின்னர் கிறிஸ் வோக்ஸ் அதிரடி காட்ட அந்த அணி 291 ரன்கள் எடுத்தது.

மொயின் விக்கெட்
இந்நிலையில் இங்கிலாந்து அணியை 250 ரன்களுக்கு உள்ளாகவே சுருட்டிருக்கும் வாய்ப்பை கவனக்குறைவு காரணமாக இந்திய வீரர்கள் இழந்துவிட்டனர். ஆட்டத்தின் 60 ஓவரிலேயே மொயின் அலி விக்கெட் ஆகிருக்க வேண்டியது. ஆனால் அதற்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டு விட்டது. 60வது ஓவரின் 5வது பந்தை ஜஸ்பிரித் பும்ரா மொயினின் கால்களை குறிவைத்து வீசினார். இதனால் எல்.பி.டபள்யூ வாய்ப்பு ஏற்பட்டது.

அதிக ஸ்கோர்
ஆனால் களத்தில் இருந்த நடுவரும் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இந்திய வீரர்களும் 3வது நடுவருக்கு பரிந்துரைப்பது குறித்து யோசிக்கக்கூட இல்லை. நேரம் முடிந்த பிறகு போடப்பட்ட ரீப்ளேவில் பந்து மொயின் அலியின் பேடில் பட்டது தெரியவந்தது. மேலும் அது எல்.பி.டபள்யு அவுட்டாகும். இந்த வாய்ப்பை தவறவிட்டதால் மொயின் அலி பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்துவிட்டது. 101 ரன்களை பிந்தங்கியுள்ள இந்திய அணி தற்போது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.


Click it and Unblock the Notifications