அணியில் யாரைத் தேர்வு செய்வது? கடும் குழப்பத்தில் விராட் கோலி
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் ஷர்மாவை தேர்வு செய்வதா, அல்லது முகமது சிராஜை தேர்வு செய்வதா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கில் தொடங்குகிறது. பல மாமாங்கம் கழித்து இங்கு சர்வதேச போட்டி நடப்பதால், ஃபீலிங்ஸ் மோடில் உள்ளது சேப்பாக்.
காந்தி காலம் முதல் ஸ்பின் டிராக்காக மட்டுமே அறியப்பட்டு வந்த சேப்பாக் பிட்ச்..... இப்போதும் ஸ்பின் டிராக்காக தான் உள்ளது. ஆகையால், 2 ஃபாஸ்ட் மற்றும் 3 ஸ்பின் கொண்டு களமிறங்கும் திட்டத்தில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.

அனுபவமா? இளமையா?
32 வயதான இஷாந்த், கடந்த ஒரு ஆண்டுகாலமாக சிகப்பு பந்தை கையில் பிடிக்கவேயில்லை. ஆனால், சிராஜ், தான் அறிமுகமான ஆஸ்திரேலிய தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார். இதில், பிரிஸ்பேனில் அவர் அள்ளிய 5 விக்கெட்டுகளும் அடங்கும். இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் அருண் முடிவு செய்ய உள்ளார். எனினும், கேப்டன் கோலி கன்ஃபியூஷன் மோடில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

சுந்தர் VS அக்ஷர்
இஷாந்த், சிராஜ் மேட்டரை கூட அப்படி இப்படி என சால்வ் செய்துவிடலாம் போல.. ஆனால், அணியின் மூன்றாவது ஸ்பின்னர் யார் என்பதில் தான் அனைவருக்கும் பேரார்வம், எதிர்பார்ப்பு எல்லாம். சேப்பாக் ஸ்பின் சப்போர்ட் டிராக் என்பதால், அஷ்வின், குல்தீப்புடன் இணைந்து வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாமா என்று அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் கோலி வழக்கம் போல ரொம்பவே யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆஃப் ஸ்பின்னர் அக்ஷர்
ஸ்பின்னர் என்பதைத் தாண்டி, ஆல் ரவுண்டராகவும் சுந்தர் ஆஸ்திரேலியாவில் இம்ப்ரெஸ் செய்திருக்கிறார். ஆனால், அக்ஷர் படேல் இடது கை ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர். இங்கிலாந்து இவரைப் போன்ற பவுலர்களிடம் தான் செமத்தியாக அடி வாங்கும்.

வெற்றி தருமா சேப்பாக்?
இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் ஆகியோர் அணியில் திரும்பியுள்ளனர். ஆகையால், இலங்கைக்கு எதிராக மோதிய அணியைவிட இப்போது பலமாக உருவெடுத்துள்ளது. அந்த அணியை வைத்துக் கொண்டே இலங்கையை அதன் மண்ணில் சம்பவம் செய்ததால், ஓரளவு நம்பிக்கையுடன் தான் சென்னைக்கு வந்துள்ளது. எனினும், பொதுவாகவே ஸ்பின்னில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியையும், ஸ்பின் டிராக் மூலம் சப்போர்ட் பண்ணும் சேப்பாக் பிட்சையும் மீறி இங்கிலாந்து சவால் அளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications