Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருக்கடியில் சிக்கிய கோலி.. 3வது டெஸ்ட் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றம்.. எப்படி உதவப்போகிறது?

லண்டன்: 3வது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணி பெரியளவில் மாற்றம் செய்துள்ள சூழலில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த தகவல் கசிந்துள்ளது.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில், யாருமே எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்த போதும், 2வது இன்னிங்ஸில் பும்ரா - முகமது ஷமி ஜோடி இணைந்து சேர்த்த 89 ரன்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இங்கிலாந்துக்கு எதிராக திருப்பியது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்களே கடும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். பழிவாங்கும் எண்ணத்தினால் இந்தியாவின் டெயில் எண்டர்ஸை கூட இங்கிலாந்தால் சமாளிக்க முடியாமல் போய்விட்டதாக ஜோ ரூட் மீதும் பெரும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியில் எப்படியவது வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து முடிவுடன் உள்ளது. இதற்காக முக்கியமான 4 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் ப்ளேயிங் 11

இந்தியாவின் ப்ளேயிங் 11

இந்நிலையில் அதனை எதிர்க்கும் வகையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அனைத்து வீரர்களுமே ஓரளவிற்கு பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். ஆனால் பந்துவீச்சில் தான் மீண்டும் அஸ்வினை சேர்ப்பது தொடர்பான குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பவுலிங்

பவுலிங்

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சரி செய்துவிட்டார். மேலும் அவர் விக்கெட் எடுக்காததும் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சிராஜ், ஷமி, பும்ரா, இஷாந்த் என 4 வேகப்பந்துவீச்சாளர்களுமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தனர்.

ஒரே ஒரு மாற்றம்

ஒரே ஒரு மாற்றம்

ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக மீண்டும் அஸ்வினை கொண்டு வர திட்டங்கள் போடப்பட்டு வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற களமாக இருந்தாலும், அஸ்வின் அசால்டாக பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். அதே போல பேட்டிங்கிலும் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அனைவரின் கோரிக்கையை ஏற்று 3வது டெஸ்டில் அஸ்வினை களமிறக்க கோலி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

Indian Cricket Team's Best Test Revenge in Recent Times | OneIndia Tamil
ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல். புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட், அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது சிராஜ்

Story first published: Friday, August 20, 2021, 15:54 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+