Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் சரித்திரத்திலேயே எந்த அணியும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ரெக்கார்டை செய்த இந்திய அணி

விசாகப்பட்டினம் : கிரிக்கெட் சரித்திரத்திலேயே எந்த அணியும் நினைத்துக் கூட பார்க்க முடியாத டெஸ்ட் ரெக்கார்டை செய்து இருக்கிறது இந்திய அணி. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த விசித்திர பேட்டிங் சாதனை அரங்கேறி உள்ளது. இந்த சாதனை செய்யக் காரணம் இந்திய மிடில் ஆர்டரின் சொதப்பலான ஆட்டம் தான்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சராசரியாகவே செயல்பட்டது. துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே சிறப்பாக ஆடி 179 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 35 ரன்களை தாண்டவில்லை. குறிப்பாக மூன்று முதல் ஆறு வரையிலான பேட்டிங் வரிசையில் களமிறங்கிய சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, ரஜத் படிதார் 32, அக்சர் பட்டேல் 27 ரன்கள் எடுத்து சரியாக 25 ரன்களுக்கு மேல், 35 ரன்களுக்குள் ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

India vs England : Indian middle order batsmen registered an unwanted record

இந்த நிலையில், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் பேட்டிங் வரிசையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சரியாக 25 ரன்கள் முதல் 35 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. டெஸ்ட் கிரிக்கெட் துவங்கி 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில் எந்த ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் இப்படி விசித்திரமான முறையில் சராசரி ரன்களை எடுத்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததில்லை.

இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்ததை நினைத்து மகிழ்வதா? அல்லது 35 ரன்களை கூட தாண்டவில்லை என நினைத்து வருந்துவதா? என்ற குழப்ப நிலைக்கு ரசிகர்களை தள்ளி இருக்கிறது தற்போதைய அனுபவம் இல்லாத இந்திய பேட்டிங் வரிசை. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது கையில் பின் வரிசை வீரர்களின் 4 விக்கெட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், களத்தில் இருக்கும் ஜெய்ஸ்வாலை நம்பியே இந்திய அணி உள்ளது. அவர் மேற்கொண்டு விரைவாக ரன் குவித்தால் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 400 - 450 ரன்களை தாண்ட வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, February 2, 2024, 18:25 [IST]
Other articles published on Feb 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+