For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் வருகிறாரா பென் ஸ்டோக்ஸ்?.. இந்தியாவுக்கு திருப்பி கொடுக்க திட்டம்.. ரூட்டின் திட்டம் என்ன?

லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் பென் ஸ்டோக்ஸை கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

Ben Stokes play the third Test after the loss at Lord’s? | Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இறுதி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி சொல்லி வைத்து ஒவ்வொரு வீரராக தூக்கி லார்ட்ஸ் மைதானத்தில் தனது 3வது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.

படு தோல்வி

படு தோல்வி

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது. இதற்கு காரணம் 2வது இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் போட்ட தவறான கணக்கு தான். விக்கெட் எடுக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு பும்ராவை பழிவாங்கும் திட்டத்தை போட்டார். இந்த அதீத நம்பிக்கையே அவர்களுக்கு வினையாக அமைந்தது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியே தோல்வியை சந்தித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அணி வீரர்களை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக கேப்டன் ஜோ ரூட் படு மோசமாக விமர்சிக்கப்படுகிறார். இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

பேட்டிங் வரிசையில் சிக்கல்

பேட்டிங் வரிசையில் சிக்கல்

ஆனால் அதில் பெரும் சிக்கல் உள்ளது. இங்கிலாந்து அணியின் பவுலிங் ஓரளவுக்கு இருந்த போதும், பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் பவுலிங்கில் ஆண்டர்சன் தவிர யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அது குறித்து இன்னும் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.

பயிற்சியாளரின் பதில்

பயிற்சியாளரின் பதில்

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், நாங்கள் பென் ஸ்டோக்ஸை அணிக்கு திரும்ப வரசொல்லி நிர்பந்திக்க மாட்டோம். ஏற்கனவே நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் தற்போது அழைத்தால் அவருக்கு இன்னும் மன அழுத்தம் ஏற்படும். ஸ்டோஸே, தான் விளையாட தயார் என மன உறுதியுடன் வரவேண்டும். அப்போது தான் சிறப்பாக இருக்கும். அவர் தற்போது குடும்பத்தினருடன் நன்றாக உள்ளார். சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். அவருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் எங்கே

பென் ஸ்டோக்ஸ் எங்கே

பென் ஸ்டோக்ஸ் கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற விடுப்பு எடுத்துள்ளார். மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது ஓய்வு தேவைப்படுவதாக பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்பினால் இங்கிலாந்துக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

கம்பேக் கொடுக்குமா?

கம்பேக் கொடுக்குமா?

இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 18, 2021, 21:51 [IST]
Other articles published on Aug 18, 2021
English summary
Is Ben Stokes to return for 3rd test against India?, england team Coach chris Silverwood gives explanation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+