Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய இளம் வீரர்.. ஓராண்டு தடை? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் டிராவிட்

விசாகப்பட்டினம் : இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக அறியப்பட்ட இஷான் கிஷன் தற்போது இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவரை இந்திய அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்து இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அது குறித்து ராகுல் டிராவிட் அந்தர் பல்டி அடித்து தான் முன்பு கூறிய கருத்தை தானே மறுத்து இருக்கிறார்.

இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் அணியில் நீக்க முடியாத ஒரு வீரராக இருந்தார். டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என அனைத்து வித அணிகளிலும் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார் இஷான் கிஷன். ஆனால், அது தான் பிரச்சனையே. அவர் 15 வீரர்களில் ஒருவராக, மாற்று வீரராகவே தொடர்ந்து இடம் பெற்றார். யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு வந்தது.

India vs England : Ishan Kishan is not ruled out from Indian team says Rahul Dravid

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவர் தனக்கு எந்த போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் விரக்தியில் இருந்தார். அப்போது டெஸ்ட் அணியிலும் தனக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை அறிந்த அவர் மனமுடைந்து இந்திய அணியை விட்டு சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அது இந்திய அணி நிர்வாகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் அவரை ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என எந்த அணியிலும் தேர்வு செய்யவில்லை. அப்போது அது குறித்து ராகுல் டிராவிட்-இடம் செய்தியாளர்கள் கேட்ட போது இஷான் கிஷன் உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று தான் தேர்வு செய்யப்பட தயார் என்பதை அறிவித்தால் அவரை நாங்கள் அணியில் தேர்வு செய்வோம் என்றார். ஆனால், இஷான் கிஷன் அதன் பின்னும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை மீறி இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் தாமாக விலகியதாலும், அதன் பின் உள்ளூர் தொடரில் ஆடுமாறு கூறியும் அதை செய்யாமல் இருப்பதாலும் அவரை அடுத்த ஓராண்டுக்கு இந்திய அணியில் தேர்வு செய்யக் கூடாது என பிசிசிஐ தரப்பில் ரகசிய தடை விதித்து இருப்பதாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டி முடிந்த பின் அளித்த பேட்டியில் தான் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என கூறவில்லை என பல்டி அடித்து இருக்கிறார். இது பற்றி டிராவிட் பேசுகையில், "நாங்கள் யாரையும் எதில் இருந்தும் ஒதுக்கி வைக்கவில்லை. எல்லோருக்கும் அணியில் இடம் பெற வழி உண்டு. நான் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என கூறவில்லை. அவர் கொஞ்சம் கிரிக்கெட் ஆடிவிட்டு, அணிக்கு திரும்ப வேண்டும் என்று தான் கூறினேன். முடிவு அவருடையது தான். நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர் இன்னும் போட்டிகளில் ஆட ஆரம்பிக்கவில்லை இல்லையா? எப்போது தயாராக இருக்கிறோம் என்பதை அவரே முடிவு செய்வார்" என்றார். ராகுல் டிராவிட்.

Story first published: Monday, February 5, 2024, 21:23 [IST]
Other articles published on Feb 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+