Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமேலும் பொறுக்க முடியாது.. இஷான் கிஷன் சோலி முடிந்தது.. ரோஹித் சர்மா போட்ட பிளான்

மும்பை : கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை மதிக்காமல் நடந்து கொண்டதால் இஷான் கிஷன் இனி அணியில் எளிதில் நுழைய முடியாதபடி சில வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே துருவ் ஜுரேல் எனும் புதிய விக்கெட் கீப்பரை தேவையின்றி டெஸ்ட் அணியில் சேர்த்து இருக்கிறது தேர்வுக் குழு.

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன் கடந்த ஓராண்டாக்கு மேலாக இந்திய அணியில் மாற்று வீரராகவே தொடர்ந்து வந்தார். மற்ற வீரர்கள் ஓய்வு எடுக்கும் போதும், காயத்தால் வெளியேறும் போதும் மட்டுமே அவருக்கு அணியில் இடம் கிடைத்து வந்தது. ஆனால், அவர் ஒரே நேரத்தில் டெஸ்ட் அணி, ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் இடம் பெற்று வந்தார். அது போன்ற வாய்ப்பு அத்தனை எளிதில் புதிதாக வரும் வீரர்களுக்கு கிடைக்காது.

 India vs England : Ishan Kishan might not find a place as Rohit Sharma want another player

ஆனால், தன்னை மாற்று வீரராக, தண்ணீர் எடுத்து வரும் "வாட்டர் பாயாக" மட்டுமே இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்துவாக இஷான் கிஷன் வருத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தான் மனச் சோர்வின் காரணமாக விலகுவதாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின் அவர் உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை.

இந்த நிலையில், தற்போது நடந்து வரும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதே போல, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் தற்போது மூன்று விக்கெட் கீப்பர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கே எல் ராகுல், பாரத் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய மூவரில் ராகுல் மற்றும் பாரத் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் அணியில் இடம் பெற்று இருந்தனர்.

அந்த வகையில் தற்போது இஷான் கிஷன் இடத்தில் துருவ் ஜுரேல் என்ற புதிய வீரரை கேப்டன் ரோஹித் சர்மா சேர்த்து இருக்கிறார். ராகுல் ஆற்றும் மற்றும் பாரத் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கும் போது மூன்றாவது விக்கெட் கீப்பருக்கு அவசியமே இல்லை. ஆனால், ரோஹித் சர்மா, இஷான் கிஷனை ஒதுக்கி வைக்கும் நோக்கத்தோடு தான் அவரது இடத்தை நிரப்பும் வகையில் மூன்றாவதாக துருவ் ஜுரேல்-ஐ அணியில் சேர்த்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

Story first published: Saturday, January 13, 2024, 18:02 [IST]
Other articles published on Jan 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+