Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பிரம்மாண்ட விக்கெட் சாதனை.. ஜேம்ஸ் ஆண்டர்சன் மைல்கல் ரெக்கார்டு

தரம்சாலா : இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்தி புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்கள்), ஷேன் வார்னே (708 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்து 700 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். மேலும், வேகப் பந்துவீச்சாளர்களில் முதல் நபராக 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை தொட்டு இருக்கிறார்.

India vs England James Anderson took 700 wickets in test cricket

2003ஆம் ஆண்டு மே மாதம் தன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று இருந்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 21 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் அவர் 187 போட்டிகளில் ஆடி 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை தொட்டு இருக்கிறார்.

India vs England James Anderson took 700 wickets in test cricket

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் விக்கெட்டை அவர் வீழ்த்திய போது இந்த மைல்கல் சாதனையை படைத்தார். வேகப் பந்துவீச்சாளர்களில் ஸ்டூவர்ட் பிராடு 604 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு முன்பே கிரிக்கெட் ஆடத் துவங்கி, அவர் ஓய்வு பெற்ற பின்னரும் விளையாடி வரும் ஆண்டர்சன் தற்போது 700 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் 9 விக்கெட்கள வீழ்த்தும் பட்சத்தில் ஷேன் வார்னே சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார் ஆண்டர்சன்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல் :

முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்கள்

ஷேன் வார்ன் - 708 விக்கெட்கள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 700 விக்கெட்கள்*

அனில் கும்ப்ளே - 619 விக்கெட்கள்

ஸ்டூவர்ட் பிராட் - 604 விக்கெட்கள்

தற்போது 41வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இனியும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடுவாரா? என்ற கேள்வியும் உள்ளது. எனினும், அவர் ஷேன் வார்னே சாதனையை முறியடிக்கவாவது ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். 41 வயதில் வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் இத்தகைய சாதனையை படைப்பது கிரிக்கெட் உலகில் மிகப் பெரும் வியப்புக்குரிய சம்பவமாக பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Story first published: Saturday, March 9, 2024, 10:45 [IST]
Other articles published on Mar 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+