Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை படைத்த பும்ரா.. ஆனால்அந்த ஜாம்பவான் ரெக்கார்டை மட்டும் தொடவில்லை

விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா 150 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனை படைத்தார். அது மட்டுமின்றி 150 விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மிகக் குறைந்த பவுலிங் சராசரி கொண்ட இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதே போல சரியாக 150 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த போது மிகக் குறைந்தப் பவுலிங் சராசரி (எத்தனை ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்) மற்றும் ஸ்ட்ரைக் ரேட் (எத்தனை பந்துகளுக்கு ஒரு முறை விக்கெட் வீழ்த்தினார்) கொண்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் பும்ராவால் வீழ்த்த முடியாத ஒரே பந்துவீச்சாளர் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் மட்டுமே.

India vs England : Jaspirt Bumrah massive world record in bowling average and strike rate

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பும்ரா 15.5 ஓவர்களில் 45 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இது அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இத்துடன் அவர் 64 இன்னிங்ஸ்களில் 152 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரது 45 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்பது இந்த நூற்றாண்டில் இந்திய மண்ணில் ஒரு வேகப் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாகும்.

அதே போல, 150 விக்கெட்களுகும் அதிகமாக எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மிகக் குறைந்த பவுலிங் சராசரி கொண்ட வரிசையில் 20.28 பவுலிங் சராசரியுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் பும்ரா. முதல் இடத்தில் 1901 முதல் 1914 வரை கிரிக்கெட் ஆடிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் சிட் பார்ன்ஸ் இருக்கிறார். அவர் 16.43 பவுலிங் சராசரி வைத்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆலன் டேவிட்சன் இருக்கிறார். அவர் 1963 வரை டெஸ்ட் கிரிக்கெட் ஆடியவர். அந்த வகையில் சுமார் 61 ஆண்டு கால இரண்டாவது சிறந்த பவுலிங் சராசரி சாதனையை முறியடித்து இருக்கிறார் பும்ரா.

அதே போல, சரியாக 150 விக்கெட்கள் வீழ்த்திய போது சிறந்த பவுலிங் சராசரி மற்றும் பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பந்துவீச்சாளர்களில் வக்கார் யூனிஸ்-க்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சரியாக 150வது விக்கெட் வீழ்த்திய போது வக்கார் யூனிஸ் 18.37 பவுலிங் சராசரி மற்றும் 35.9 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அதே காலக்கட்டத்தில் பும்ரா 20.28 பவுலிங் சராசரி மற்றும் 44.7 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

Story first published: Sunday, February 4, 2024, 10:17 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+