Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : யப்பா சாமி நீங்க ஆடின வரைக்கும் போதும்.. முக்கிய வீரரை ஆட விடாத இங்கிலாந்து அணி

விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் அவர் ஆடுகளத்துக்கு திரும்பவில்லை. அதனால், அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டதா? அவர் இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வருவாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

உண்மையில் ஜோ ரூட்டுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய அவர் முக்கியம் என்பதால் அவரை அழைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோ ரூட் மூன்றாம் நாள் ஆட்டத்துக்கு முன் வலைப் பயிற்சியின் போது அவருக்கு விரலில் லேசான காயம் ஏற்பட்டது. அதை அடுத்து அவருக்கு மீண்டும் போட்டியில் ஸ்லிப் ஃபீல்டிங் செய்த போது சுப்மன் கில் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க சென்ற போது விரலில் காயம் ஏற்பட்டது.

 India vs England : Joe Root injured in right finger on third day of Vizag Test

இதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்த பின் மீண்டும் ஃபீல்டிங் செய்ய அனுப்பி இருக்கலாம். ஆனால், பேட்டிங்கில் அவர் பங்கு முக்கியம் என்பதால் அவரை ஓய்வு எடுக்க செய்து இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். அவர் மீண்டும் ஃபீல்டிங் செய்ய சென்று, மீண்டும் விரலில் காயம் ஏற்பட்டால் அவரால் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்களும், இங்கிலாந்து அணி 253 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் அடித்து இருந்தார். இங்கிலாந்து அணிக்கு இந்தியா 399 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது விக்கெட் விழுந்தால் ஜோ ரூட் பேட்டிங் செய்ய வருவார்.

Story first published: Sunday, February 4, 2024, 19:16 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+