IND VS ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 1981ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியை தற்போது பார்க்கலாம். கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடிய டெஸ்ட் இது. இந்த டெஸ்ட் அவரது இரண்டாவது டெஸ்ட். சுனில் கவாஸ்கருடன் இந்திய இன்னிங்சை துவக்கிய ஸ்ரீகாந்த் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
முதல் விக்கெட்டை இந்திய டீம் இழந்த பொழுது ஸ்கோர் 102 - 1.இதில் ஸ்ரீகாந்த் அடித்த ரன்கள் 65.முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து டீம் பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடினார்கள்.இங்கிலாந்து அணி முதல் இரண்டு நாட்கள் முழுமையாக ஆடி ஆல் அவுட் ஆகினார்கள்.அவர்களது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 400 ரன்கள்.

இங்கிலாந்து டீமில் அதிக ரன்களை குவித்தவர்கள் முறையே
டேவிட் கோவர் (82)
கிரஹம் கூச் (58)
இயன் போத்தம் (55)
கிரஹம் டில்லே (52)
ஜியோப் பாய்காட் (36)
பாப் தேலர் (33)
இயன் போத்தம் 1 சிக்ஸர் எடுத்தார்.
மொத்த பவுண்டரிகள் 49
அதிகம் 4 அடித்தவர்கள்
டேவிட் கோவர் (12)
இயன் போத்தம் ( 8 )
கிரஹம் கூச் ( 7 )
மைக் காட்டி ங் ( 6 )
ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் 88 ரன்கள் ( கூச், பாய்க்காட்) இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் 84 ரன்கள் (கூச், தவரே)ஒன்பதாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் 69 ரன்கள்(தேலர், டில்லே)
இந்திய பவுலர்கள் மொத்தம் வீசிய ஓவர்கள் 158.
கபில் தேவ் 3 - 136
மதன் லால் 1 - 46
தோஷி 2 - 83
ரவி சாஸ்திரி 4 - 83
இந்திய டீம் ஓய்வு நாளுக்கு அடுத்த தினம் ( மூன்றாம் நாள் ஆட்டம்) தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவக்கினர்.ஸ்ரீகாந்த் (துவக்கத்தில் குறிப்பிட்டது போல்) தனது அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினார். மட மடவென்று ரன்கள் அதிகரித்தன.சுனில் கவாஸ்கர் நிதானமாக ஆட்டத்தை ஆடினார்.
ஸ்ரீகாந்த் 8 பவுண்டரிகள் துணையுடன் 65 ரன்கள் எடுத்தார். கிட்டத்தட்ட ஒரு நாள் ஸ்டைலில் ஆட, ஸ்டேடியத்தில் குழுமி இருந்த ரசிகர்கள் கை தட்டி மகிழ்சியில் ஆரவாரம் செய்தனர். ஸ்ரீகாந்த், போத்தம் வீசிய பந்தில் கூச் கேட்ச் பிடிக்க அவுட் .
இந்த ஜோடி சேர்த்த ரன்கள் 102.
கவாஸ்கரும், வெங்சர்காரும் தொடர்ந்தனர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில்
கவாஸ்கர் 71 * வெங்சர்கார் 42 *நான்காம் நாள் சதம் எடுத்த கவாஸ்கர், ஆட்ட முடிவில் விளையாடிக் கொண்டு இருந்தார்.இந்திய டீமின் ஸ்கோர் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்கள்.
கவாஸ்கர் 163 *
கீர்மானி 7 *
மறுநாள் இந்திய டீம் ஆல் அவுட் 428 ரன்கள்.
சுனில் கவாஸ்கர் 172 ரன்கள். ( 472 பந்துகள், 19 x 4 )
ஸ்ரீகாந்த் 65 ரன்கள்
கபில் தேவ் 59 ரன்கள்
வெங்சர்கார் 43
கீர்த்தி அசாத் 24
கபில் தேவ் ( 10 x 4 & 1 x 6)
சந்தீப் படீல், கீர்த்தி அசாத் தலா 3 பவுண்டரிகள் எடுத்தனர்.
கவாஸ்கர் ஒன்பதாவதாக அவுட் ஆனார். அண்டர் வுட் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து. 438 - 9 கவாஸ்கர், வெங்சர்கார் ஜோடி 93 ரன்கள் எடுத்தனர்.கவாஸ்கர், கபில் தேவ் ஜோடி 92 ரன்கள் எடுத்தனர்.இந்திய வீரர்கள் 47 பவுண்டரிகள் அடித்தனர்.
இங்கிலாந்து டீம் பவுலர்கள் 150 ஓவர்கள் பந்து வீசினார்கள்.
இயன் போத்தம் 2 - 137
ஜான் லெவர் 5 - 100
அண்டர்வுட் 3 - 88
இங்கிலாந்து டீம் தங்களது இரண்டாம் இன்னிங்சை துவக்கி இறுதி நாள் ஆட்டம் முடியும் வரையில் ஆடினர்.அப்பொழுது ஸ்கோர் 174 / 3
பாய்காட் 50, கூச் 40, கோவர்* 34, தவரே 31 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து வீரர்கள் 24
பவுண்டரிகள் அடித்தனர்.கபில் தேவ், தோஷி, சாஸ்திரி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.ஆட்ட நாயகர் சுனில் கவாஸ்கர்.பெங்களூரில் 09 - 14, டிசம்பர், 1981 நடந்த இந்த டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிந்தது.
வாசுதேவன், பெங்களூரு