IND vs ENG : இங்கிலாந்து, இந்தியா இடையே நான்காவது டெஸ்ட் மேட்ச் டெல்லியில்.
அறிமுக வீரர் தனது சதத்தை பதிவு செய்தார்.இவரது சதம் தவிர, இந்த டெஸ்டில் ஒரு இரட்டை சதம், மற்றும் இரண்டு சதங்கள் எடுக்கப் பட்டன. எந்த ஒரு பவுலரும் 3 விக்கெட்டுக்கு மேல் எடுக்கவில்லை.
ஒவ்வொரு டீமும் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக ஆடினார்கள்.மொத்தம் 164 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்.இந்திய டீம் வீரர்கள் எடுத்த பவுண்டரிகள் 100. அறிமுக வீரர் ஹனுமந்த் சிங்
இந்திய டீம் கேப்டன் மன்சூர் அ லி கான் பட்டோடி டாஸ் வென்று பேட்டிங் ஆட முடிவு செய்தார்.ஜெய்சிம்ஹா, குந்தேரன் துவக்கினர்.

இந்த தொடரில் அருமையாகவும், அதிரடியாகவும் விளையாடி வந்த குந்தேரன், தனது வழக்கமான ஆட்டத்தை தொடர்ந்தார்.முதல் விக்கெட்டுக்கு பார்ட்னெர்ஷிப் 81 ரன்கள். டிட்மஸ் வீசிய பந்தில் அவுட். ரன்கள் 40 ( 7 x 4 ). 81 - 1 அடுத்து பெவிலியனுக்கு திரும்பியவர் ஜெய்ஸிம்ஹா. இவரையும் அவுட் செய்தவர் டிட்மஸ். ரன்கள் 47 ( 6 x 4 & 1 x 6 )
90 - 2
ஸர்தேசாய், பட்டோடி ஜோடி சேர்ந்து விளையாடினர். 85 ரன்கள் கூடின.
பட்டோடியின் விக்கெட்டையும் கைப்பற்றியவர் டிட்மஸ்
116 - 3
ஸர்தேசாய், ஹனுமந்த் சிங் சேர்ந்து நேர்த்தியான ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.
மோர்ட்டிமோர் பந்தில் பார்க்ஸ் கேட்ச் பிடிக்க
ஸர்தேசாய் பெவிலியனுக்கு திரும்பினார்.
எடுத்த ரன்கள் 44 ( 3 x 4 )
201 - 4
அடுத்து ஆட வந்த சந்து போர்டே, ஹனுமந்த் சிங்குடன் விளையாடா ஆரம்பித்தார்.
தனது முதல் அரை சத்தத்தை பூர்த்தி செய்த ஹனுமந்த் சிங், சிறப்பான ஆடத்தை ஆடினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய டீமின் ஸ்கோர் 247 - 4
ஹனுமந்த் சிங் 79* , போர்டே 22*இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. கூடுதலாக 20 ரன்கள் கிடைத்தன, இந்திய டீமிற்கு இந்த ஜோடியின் ஆட்டங்கள் மூலம்.
பிரைஸ் போட்ட பந்தில் கிளீன் போல்ட் ஆனார் போர்டே. ரன்கள் 26 ( 2 x 4 ) 267 - 5
சலீம் துராணி ஆட வந்தார்.அறிமுக டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஹனுமந்த் சிங்.மோர்ட்டிமோர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து, அவுட் ஆனார் ஹனுமந்த் சிங். ரன்கள் 105 ( 16 x 4 ) 283 - 6
கிரிபால் சிங் எந்த ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
சலீம் துராணி எடுத்த ரன்கள் 16 ( 1 x 4 ) வில்சன் பவுலர். ஸ்மித் கேட்ச் பிடித்தார். 307 - 8
பாபு நட்கர்னி எடுத்த ரன்கள் 34 ( 4 x 4 ) ரன் அவுட். 344 - 9
சந்திர சேகர் ரன் எதுவும் எடுக்கவில்லை. ரன் அவுட். ராம்கன்த் தேசாய் 14* நாட் அவுட்
இந்திய டீம் ஆல் அவுட் 344.
இங்கிலாந்து டீம் பவுலிங்
ஜான் ஸ்னோ 1 - 71
டான் வில்சன் 1 - 41
டிட்மஸ் 3 - 100
மோர்ட்டிமோர் 3 - 74
தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து டீம் துவக்க ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடினார்கள்.முதல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் ஏ ஜி கிரிபால் சிங். முதல் விக்கெட் ஸ்கோர் 101 ல் கிடைத்தது. 58 ரன்கள் எடுத்து இருந்த பிரைன் போலஸ். (10 x 4 )
LBW கிரிபால் சிங். 101 - 1
இரண்டாவது விக்கெட்
ஜான் எட்ரிச். கிரிபால் சிங் போட்ட பந்திற்கு அவரிடமே கேட்ச் கொடுத்தார்.
ரன்கள் 41 ( 7 x 4 )
114 - 2
கேப்டன் மைக் ஸ்மித்தும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய டான் வில்சன் இருவரும் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
ஸ்கோர் 124 - 2 மைக் ஸ்மித் 16* , டான் வில்சன் 2*மூன்றாம் நாள் ஆட்டம், ஒரு நாள் ஓய்வு தினத்திற்கு மறுநாள் தொடர்ந்தது.
விரைவில் டான் வில்சன் பெவிலியன் திரும்பினார். ரன்கள் 6
234 - 3
மைக் ஸ்மித் விக்கெட்டை எடுத்தவர்
கிரிபால் சிங். கேட்ச் பிடித்தது பட்டோடி.
ரன்கள் 37 ( 10 x 4 )
153 - 4
பீட்டர் பார்பிட், காலின் கௌட்ரே ஜோடி ரன்களை குவிக்க துவங்கினர்.
இங்கிலாந்து டீம் 200 ஐ கடந்தது. 250 ஐ தாண்டி சென்றது.
இந்த ஜோடி சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் அதிகரித்தனர். 67 ரன்கள் ( 10 x 4 ) குவித்த
பீட்டர் பார்பிட், குந்தேரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பவுலர் சலீம் துராணி. 268 - 5.
ஜிம் பார்க்ஸ் தனது பங்கிற்கு ரன்கள் குவித்தார்.
காலின் கௌட்ரே,ஜிம் பார்க்ஸ் ஜோடி மூன்றாம் நாள் முடியும் பொழுது 86 ரன்கள் ஸ்கோரை உயர்த்தினர்.
காலின் கௌட்ரே தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
அன்றைய ஆட்ட முடிவில் இங்கிலா ந்து டீமின் ஸ்கோரன் 354 - 5.
காலின் கௌட்ரே 102* ,
ஜிம் பார்க்ஸ் 32*
நான்காம் நாள் ஆட்ட துவக்கத்தில் ஜிம் பார்க்ஸ் அவுட். சந்திரசேகர் பவுலர்.
ரன்கள் 32. ( 3 x 4 & 1 x 6)
354 - 6
பாரி நைட் 21 ரன்கள்
( 4 x 4 ) எடுத்து அவுட் ஆனார். தேசாய் கேட்ச் பிடித்தார். நட்கர்னி
பந்து போட்டவர். 397 - 7.
இங்கிலா ந்து டீம் 400 ரன்கள் எடுத்தனர்.
காலின் கௌட்ரே, ஜான் மோர்ட்டிமோர் சேர்ந்து ஆடினர்.
151 ரன்கள் எடுத்த காலின் கௌட்ரே LBW நட்கர்னி. ( 23 x 4 & 1 x 6 )
438 - 8
ஹனுமந்த் சிங் கேட்ச் பிடிக்க, நட்கர்னி வீசிய பந்தில் மோர்ட்டிமோர்.அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ரன்கள் 21. ( 2 x 4 & 1 x 6 ) 451 - 9
பிரெட் டிட்மஸ் 4
ஜான் பிரைஸ் 0
இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 451.
இந்திய டீம் பவுலர்கள் 185.3 ஓவர்கள் பவுலிங் செய்தனர்.
ஏஜி கிரிபால் சிங் 3 - 90
சந்திரசேகர் 3 - 79
சலீம் தூரணி 1 - 93
நட்கர்னி 3 - 97
இந்த டெஸ்டில் குறிப்பாக பாபு நட்கர்னி
57 ஓவர்கள் வீசியதில், 30 ஓவர்கள் மெய்டன்கள்.
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய ஒப்பனிங் ஆட்டக்காரர்கள், சிறப்பாக விளையாடினர்.
முதல் விக்கெட் ஜெய்சிம்ஹா. ரன்கள் 50.
( 7 x 4 & 1 x 6 ) 74 - 1
ஸ்டம்பிங் செய்தவர் ஜிம் பார்க்ஸ். பவுலர் பீட்டர் பார்பிட்.
விளையாட வந்த திலிப் ஸர்தேசாய் எடுத்த ரன்கள் 4 ( 1 x 4 )
101 - 2
வில்சன் பந்தில் போல்ட் ஆனார்.
அடுத்த களம் இறங்கிய கேப்டன் பட்டோடி,
குந்தேரன் இருவரும் 65 ரன்கள் உயர உதவி செய்தனர், அந்த நாள் ஆட்ட முடிவில்.
ஸ்கோர் 166 - 2.
குந்தேரன் 73* , பட்டோடி 32*
ஐந்தாம் நாள்
இங்கிலாந்து பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க திணறினர்.
குந்தேரன் இந்த தொடரின் இரண்டாவது சதம் அடித்தார். 100.
( 15 x 4 ). LBW பிரைஸ்.
226 -3
குந்தேரன், பட்டோடி ஜோடி சேர்ந்து எடுத்த ரன்கள் 125.
இந்த தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் குந்தேரன், அன்றைய மெட்ராஸ் டெஸ்டில். அவர் எடுத்த ரன்கள் 192.
தொடர்ந்த பட்டோடி தனது சதத்தை எடுத்தார்.
ஹனுமந்த் சிங் 23 ரன்கள். ( 3 x 6 ) வில்சன் இவர் விக்கெட்டை கைப் பற்றினார்.
273 - 4
பட்டோடியும், போர்டேயும் சேர்ந்து ஆடினார்கள்.
10 பவுண்டரிகள் உதவியுடன் போர்டே எடுத்த ரன்கள் 67*
இரட்டை சதம் எடுத்தார்,
பட்டோடி.
நாள் ஆட்ட முடிவில் இந்திய டீமின் ஸ்கோர் 463 - 4
பட்டோடி 203*
போர்டே 67*
பட்டோடி ( 23 x 4 & 2 x 6 )
இங்கிலாந்து டீம் வீரர்கள் 165 ஓவர்கள் வீசினார்கள்.
ஜான் பிரைஸ் 1 - 36
டான் வில்சன் 2 - 74
பீட்டர் பார்பிட் 1 - 81
இவர்களை தவிர பவுலிங் செய்தவர்கள்
பாரி நைட் ( 0 - 47 )
டிட்மஸ் ( 0 - 105 )
மோர்ட்டிமோர் ( 0 - 52 )
மைக் ஸ்மித் ( 0 - 52 )
இந்த டெஸ்ட் நடைப் பெற்றது
08 - 13 , பிப்ரவரி 1964.
டிராவில் முடிந்தது.
வாசுதேவன், பெங்களூரு