
4வது டெஸ்ட்
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓவல் மைதான பிட்ச்சானது ஆட்டத்தின் 4வது மற்றும் 5வது நாளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அஸ்வினை சேர்க்க விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மைக்கேல் வாகன்
இந்நிலையில் இந்த போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது மிகப்பெரும் தவறு. இது முட்டாள் தனமான முடிவு. நான் பார்த்ததிலேயே அணி தேர்வில் செய்யப்பட்ட பெரும் தவறாக இதனை பார்க்கிறேன்.

அஸ்வினின் அனுபவம்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 413 விக்கெட்களை எடுத்துள்ளார். 5 சதங்களையும் அடித்துள்ளார். இத்தகைய வீரரை அணியில் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். 4 போட்டிகளில் ஒன்றில் கூட அஸ்வின் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோலி விளக்கம்
அஸ்வின் விவகாரம் குறித்து பேசிய கேப்டன் கோலி, இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை வீரர்கள் (பேட்ஸ்மேன்கள்) உள்ளனர். ஆகையால், அவர்களுக்கு ஜடேஜாவால் சிறப்பாக பந்து வீச முடியும். இந்த மேட்சில் அவர் அசத்த முடியும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் ஓவர் தி விக்கெட் வந்து பந்து வீச முடியும். அதுமட்டுமின்றி, நம்பர்.7வது வீரராக அவர் களமிறங்குவது முக்கியமானது" என்று அஷ்வின் சேர்க்கப்படாததற்கு தனது தன்னிலை விளக்கத்தை கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











