For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொனால்டோ vs புஜாரா.. வித்தியாசமான ஒப்பீட்டை வைத்த வாகன்.. ஒரே குழப்பம் என கருத்து!

ஹெட்டிங்லி: ரொனால்டோவின் அணி மாற்றம், இந்தியாவின் திடீர் எழுச்சியை ஒப்பிட்டு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஒப்பிட்டுள்ளார்.

Recommended Video

England beat India by an innings and 76 runs at Headingley | IND vs ENG 3rd Test | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி 4ம் நாளன்றே முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி தோல்வியடைந்தாலும், இறுதிகட்டத்தில் இந்திய அணி கண்ட எழுச்சி ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 சொதப்பல்

சொதப்பல்

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்கள் அடித்தார். ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

குவிந்த ரன்கள்

குவிந்த ரன்கள்

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் முதல் இன்னிங்ஸின் இறுதியில் அந்த அணி 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் ஸ்கோரை சமன் செய்யவே 354 ரன்கள் தேவைப்பட்டதால் இந்திய அணி மீண்டும் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதனை அனைத்தையும் மாற்றி அமைத்தது. இந்திய அணியின் விராட் கோலி - சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் நிலைத்து நின்று இந்திய அணியின் தோல்வியை தள்ளிப்போட்டனர். குறிப்பாக புஜாராவின் ஆட்டம் அனைவருக்கும் ஆச்சரியமளித்தது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

புஜாரா பெரும்பாலும் நிதானமாகவே விளையாடுவார். அவரின் டொக்கு ஷாட்களால் ரசிகர்கள் பொறுமை இழந்துவிடுவார்கள். ஆனால் இந்த போட்டியில் திடீரென அதிரடி காட்டினார். புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் வழக்கமாக 30க்கு கீழ் தான் இருக்கும். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 50-க்கு குறையவேயில்லை. இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர்கள் ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் பல வகையாக யுக்திகளை கையாண்டபோதும் புஜாரா ரன்குவிப்பை தடுக்க முடியவில்லை. இதனால் அவர் அரைசதம் விளாசி, சதம் அடிப்பதற்கு அருகில் சென்றுவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக 91 ரன்களிலேயே அவர் அவுட்டாகி வெளியேறினார். 180 பந்துகளை சந்தித்த புஜாரா 15 பவுண்டரிகளுடன் 91 ரன்களை அடித்தார்.

ரொனால்டோவுடன் ஒப்பீடு

ரொனால்டோவுடன் ஒப்பீடு

இந்நிலையில் இந்தியாவின் ஆட்டத்தையும், கால்பந்து ரொனால்டோவையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரொனால்டோ யுனைட்டெட் அணிக்கு மாறிவிட்டார், மற்றொரு புறம் இந்திய அணி 3வது நாள் முழுவதும் நிலைத்து நின்று ஆடியுள்ளது. எனக்கு எது மிகப்பெரிய ஷாக் என்றே தெரியவில்லை. ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சேர்ந்தது மிகப்பெரும் ஆச்சரியம். இந்திய அணி வெள்ளிக்கிழமை நாளை கூட தாண்டாது என நினைத்தேன் அது பொய்யாகியுள்ளது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

புஜாரா எதைக்குடித்து விட்டு விளையாட களத்திற்கு வந்தார் எனத் தெரியவில்லை. அவரின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. புஜாரா முழு சுதந்தரத்துடன் விளையாட வந்தார் என நினைக்கிறேன். எனக்கு தெரிந்து அவர், நான் முழு சுதந்திரத்துடன், போட்டியை ரசித்து விளையாடப்போகிறேன் என்ற முடிவுடன் களமிறங்கினார் என்று நினைக்கிறேன்.

புகழாரம்

புகழாரம்

அவரின் ஃப்ளிக் ஷாட்கள் மிக அருமையாக இருந்தது. அணி அழுத்தத்தில் இருந்த போது அவரின் பங்களிப்பு அருமையாக இருந்தது. புஜாராவின் ஆட்டத்தை ரசித்து பார்த்தேன். அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது என மைக்கேல் வாகன் புகழ்ந்து தள்ளியுள்ளார். புஜாரா முதல் இன்னிங்ஸில் மோசமாக ஆடியதற்கு ' அவர் அறிவை இழந்துவிட்டார் என வாகன் தான் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 28, 2021, 22:13 [IST]
Other articles published on Aug 28, 2021
English summary
Michael Vaughan likened Cristiano Ronaldo's whirlwind transfer and Pujara's Innings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+