Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதி 2 டெஸ்ட் போட்டிகள்... ஷமி, சைனி அணியில இணையறாங்க... கலக்கல் ஆட்டம் காத்திருக்கு!

டெல்லி : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் முகமது ஷமி மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இணையவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த ஷமி, சைனி

காயமடைந்த ஷமி, சைனி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் முகமது ஷமி மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்தனர். இதையடுத்து என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு பிட்னசை நிரூபித்துள்ளனர். காயம் காரணமாக இவர்கள் இருவரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பிசிசிஐ கோரிக்கை

பிசிசிஐ கோரிக்கை

இந்நிலையில் வரும் 20ம் தேதி துவங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இவர்களை அணியில் இணைக்க வேண்டாம் என்று பிசிசிஐ அணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் அடுத்து நடைபெறவுள்ள இரு போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிட்னசை நிரூபித்த சைனி

பிட்னசை நிரூபித்த சைனி

இதன் காரணமாக இவர்கள் இருவரும் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதால் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இவர்களை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சைனி தற்போது பெங்களூருவின் என்சிஏவில் பிட்னசை நிரூபித்துவிட்டு அங்கேயே தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அணியை அறிவிக்கும் பிசிசிஐ

அணியை அறிவிக்கும் பிசிசிஐ

தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு அடுத்ததாக நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ அறிவிக்க உள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 போட்டிகளை கொண்ட டி20 தொடருக்கான அணியையும் பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 16, 2021, 12:37 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+