Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இங்கிலாந்து டி20, ஒருநாள் தொடர்கள் எப்போது? தேதி, நேரம், எந்த மைதானத்தில் நடைபெறும்?

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. அதனால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முதலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜனவரி 22 அன்று தொடங்க உள்ளது. அடுத்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடர் பிப்ரவரி 6 அன்று துவங்க உள்ளது.

ind vs eng india england

டி20 தொடரின் மூன்று போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த இரு தொடர்களின் போட்டி அட்டவணை மற்றும் போட்டி துவங்கும் நேரம் ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து டி20 தொடருக்கான போட்டி அட்டவணை:

1வது டி20 - ஜனவரி 22, 2025 - கொல்கத்தா - ஈடன் கார்டன்ஸ்

2வது டி20 - ஜனவரி 25, 2025 - சென்னை - எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம்

3வது டி20 - ஜனவரி 28, 2025 - ராஜ்கோட் - சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

4வது டி20 - ஜனவரி 31, 2025 - புனே - மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

5வது டி20 - பிப்ரவரி 2, 2025 - மும்பை - வான்கடே ஸ்டேடியம்

டி20 போட்டி தொடங்கும் நேரம் - இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரின் ஐந்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு துவங்கும்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை:

1வது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 6, 2025 - நாக்பூர் - விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

2வது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 9, 2025 - கட்டாக் - பாரபதி ஸ்டேடியம்

3வது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 12, 2025 - அகமதாபாத் - நரேந்திர மோடி ஸ்டேடியம்

ஒருநாள் போட்டி தொடங்கும் நேரம் - இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும் மதியம் 1.30 மணிக்கு துவங்கும்.

Story first published: Tuesday, January 7, 2025, 16:18 [IST]
Other articles published on Jan 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+