Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி நீக்கம்.. ஜோ ரூட்டுக்கு வாய்ப்பு

லண்டன்: 2025 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. இந்த இரண்டு தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து ஒருநாள் அணி -

ஜோஸ் பட்லர் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சகிப் மஹ்மூத், ஃபில் சால்ட், மார்க் உட்

ind vs eng england champions trophy 2025 2025

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து டி20 அணி -

ஜோஸ் பட்லர் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், சகிப் மஹ்மூத், ஃபில் சால்ட், மார்க் உட்

இங்கிலாந்து ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருக்கிறார். அதே சமயம் ஒருநாள் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மூத்த வீரரான ஜோ ரூட் வாய்ப்பு பெற்று இருக்கிறார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.

அதன் பின் ஜோ ரூட்டுக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அவருக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்க உள்ள அதே அணி தான் ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. ஆனால், ஒரே ஒரு மாற்றமாக டி20 அணியில் ஜோ ரூட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரெஹான் அஹ்மத் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ள அதே இங்கிலாந்து ஒருநாள் அணி தான் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்க உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாட உள்ளன.

இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஜனவரி 25 அன்று சென்னையிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 28 அன்று ராஜ்கோட்டிலும், நான்காவது போட்டி ஜனவரி 31 அன்று காஹுஞ்சேவிலும், ஐந்தாவது போட்டி பிப்ரவரி 2 அன்று மும்பையிலும் நடைபெற உள்ளன. அதன் பின் பிப்ரவரி 6, 9 மற்றும் 12 ஆகிய மூன்று தேதிகளில் இந்த இரண்டு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன.

Story first published: Sunday, December 22, 2024, 16:41 [IST]
Other articles published on Dec 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+