Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிலைமை மோசமாகிவிட்டது.. உடனே மாத்துங்க.. இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு சிக்கல்.. ஷாக்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி ஆட உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் எந்த மைதானத்தில் நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வென்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தியது.

டி 20

டி 20

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்த அகமதாபாத் மைதானத்தில் டி 20 போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 5 டி 20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது. அதன்பின் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது.

ஒருநாள்

ஒருநாள்

இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் புனே மைதானத்தில் மார்ச் கடைசி வாரம் நடக்க உள்ளது. மூன்று போட்டிகளும் புனே மைதானத்தில் நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் தற்போது புனேவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனா கேஸ்கள்

கொரோனா கேஸ்கள்

புனேவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 5000க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு இதனால் இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு மீண்டும் லாக்டவுன் கொண்டு வரும் எண்ணத்தில் மஹாராஷ்டிரா அரசு உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

லாக்டவுன் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் பெரும்பாலும் லாக்டவுன் கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள். இதனால் மூன்று ஒருநாள் போட்டிகளையும் இடம் மாற்ற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். புனேவில் இருந்து வேறு இடத்திற்கு ஒருநாள் போட்டிகளை மாற்ற வாய்ப்புகள் உள்ளது.

மைதானம்

மைதானம்

இதே அகமதாபாத் மைதானம் அல்லது ஹைதராபாத் மைதானத்தில் ஆட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். கொல்கத்தாவில் தேர்தல் நடக்க உள்ளதால் அங்கு மார்ச் இறுதியில் ஒருநாள் போட்டிகளை நடத்த முடியாது. இதனால் ஒருநாள் போட்டிகள் எந்த மைதானத்திற்கு மாற்றப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, February 27, 2021, 10:03 [IST]
Other articles published on Feb 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+