For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை அணியிலிருந்து நீக்க பேச்சு அடிப்பட்டது! என் வாழ்க்கையை மாற்றிய தொடர் அது தான்.. அஸ்வின் பேச்சு

R Ashwin : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறாவது போட்டியில் பங்கேற்க உள்ளார். இதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டும் முதல் தமிழர் என்ற பெருமை அவருக்கு சேரும். இந்த நிலையில் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அஸ்வின் பேசியிருக்கிறார்.

அதில் நிச்சயமாக இது மிகப் பெரிய விஷயம்தான். நான் சேர்ந்த இடத்தை விட இதை நோக்கி நான் பயணித்த விதம்தான் மிகவும் ஸ்பெஷல் ஆனது. இந்தப் போட்டிக்காக நான் வித்தியாசமாக எந்த விதத்திலும் தயாராகவில்லை. எங்களுக்கு டெஸ்ட் போட்டியை வெற்றி பெறுவது தான் நோக்கமாகும்.

India vs England - R Ashwin speaks about his turning point ahead of 100th test

நூறாவது டெஸ்ட் போட்டி என்பது எனக்கு மிகப் பெரிய விஷயம்.
என்னை விட என்னுடைய தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தான் இது மிகப்பெரிய தருணமாக இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி என்னுடைய குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஒரு கிரிக்கெட் வீரராக என் பயணத்தை தொடங்கும் போது என்னுடைய குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியமாக அமைந்தது. என்னுடைய தந்தை தினமும் 40 ஃபோன் காலையாவது பேசி அவர் மகன் எப்படி விளையாடுகிறார் என்பது குறித்து பதில் சொல்லி வருகிறார். என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் திருப்பத்தை ஏற்படுத்தி தொடர் என்றால் அது 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் நாங்கள் சொந்த மண்ணில் மோதிய போட்டிதான்.

அந்த தொடரில் நாங்கள் தோல்வியை தழுவிய பிறகு என்னை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சு அடிபட்டது. 4 போட்டிகளில் நான் வெறும் 14 விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருந்தேன். சராசரியாக 52 ரன்கள் கொடுத்திருந்தேன். இந்த தொடருக்கு பிறகு தான் நான் என்ன தவறு செய்தேன். எந்த விஷயத்தில் நான் கவனம் செலுத்தி என்னுடைய பந்து வீட்டில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது குறித்து புரிந்து கொண்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் வீசியதில் சிறந்த பந்துவீச்சு என்றால் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியை தான் நான் கூறுவேன். 21 ஆண்டுகளுக்கு முன்பு நான் தர்மசாலாவில் அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இரண்டு மாதம் தங்கினேன். அப்போது இது மிகவும் குளிர்பிரதேசமாக இருந்தது. என்னால் பந்தை பிடிக்கவே முடியவில்லை.

அதுதான் கிரிக்கெட்டின் அழகு. தெரியாத இடத்தில் நாம் அதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டும். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் மீடியா நண்பர்களுடன் நட்பு வைத்துக் கொள்வேன். அவர்களிடமிருந்து பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் எப்படி பயிற்சி செய்கிறார்கள் என்ற வீடியோவை பார்ப்பேன். அதன் மூலம் அவர்களது விக்கெட் எப்படி எடுக்க வேண்டும் என்ற யுக்தியை வகுப்பேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 5, 2024, 16:56 [IST]
Other articles published on Mar 5, 2024
English summary
India vs England - R Ashwin speaks about his turning point ahead of 100th test என்னை அணியிலிருந்து நீக்க பேச்சு அடிப்பட்டது! என் வாழ்க்கையை மாற்றிய தொடர் அது தான்.. அஸ்வின் பேச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+