சென்னை டெஸ்ட்: இந்தியா அபார ரன் குவிப்பு.. ராகுல் 199 ரன்களில் அவுட்
சென்னை: இந்தியா-இங்கிலாந்து நடுவேயான 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 16ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்களை குவித்தது.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3வது நாள் ஆட்ட நேர இறுதியான இன்று, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் 199 ரன்கள் எடுத்தார். இரட்டை சதம் விளாச 1 ரன் தேவைப்பட்ட நிலையில் அடில் ரஷித் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

விராட் கோஹ்லி 15 ரன்களிலும், புஜாரா 16 ரன்களிலும் அவுட்டானார். பார்திவ் பட்டேல் 71 ரன்கள் குவித்தார். கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அடில் ரஷித், மொயீன் அலி, ஸ்டோக்ஸ், பிராட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
1 ரன்னில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் பட்டியலில் பல ஜாம்பவான்கள் உள்ளனர். முகமது அசாரூதின், சனத் ஜெயசூர்யா, யூனிஸ் கான், இயான் பெல், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் 199 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள்.


Click it and Unblock the Notifications