Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘லார்ட்ஸ் மைதானமே அதிர வேண்டும்’.. ஓய்வறையிலேயே கோலி போட்ட திட்டம் தான் அது.. அஸ்வின் ஓபன் டாக்!

லார்ட்ஸ்: பும்ரா - ஷமி விளையாடிவிட்டு, பெவிலியன் திரும்பியபோது சக அணி வீரர்களிடம் கேப்டன் விராட் கோலி கூறிய திட்டத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா - ஷமி ஆகியோர் இங்கிலாந்து அணியை மிரட்டினர்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி, 391 குவித்தது. இதன்பிறகு 27 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது.

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணியின் 2வது இன்னிங்ஸில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும், பொறுமையாக ஆடிய ரஹானே 61 ரன்களும், மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா, ரிஷப் பண்ட், இஷாந்த் ஷர்மா ஆகியோர் விரைவாக வெளியேறி விட்டனர்.

பும்ரா - ஷமி பார்ட்னர்ஷிப்

பும்ரா - ஷமி பார்ட்னர்ஷிப்

இதனையடுத்து களமிறங்கிய முகமது ஷமி - பும்ரா ஜோடி பேட்டை சுழற்றி ரன்களை சேர்க்க ஆரம்பித்ததோடு, டெஸ்ட்டில் தங்களது அதிகபட்ச ரன்களையும் எட்டினர். இதில் ஷமி சிக்ஸரோடு அரை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்தியா 271 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து பவுலர்கள் பும்ராவை கடுமையாக தாக்கிய போது அவர், நிலைத்து நின்று ஷமிக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தது வியக்கவைத்தது.

கோலி போட்ட திட்டம்

கோலி போட்ட திட்டம்

இந்நிலையில் அவர்கள் ஓய்வறைக்கு திரும்பும் முன்பு, அணி வீரர்களுக்கு விராட் கோலி கூறிய திட்டத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், பும்ரா - ஷமி உணவு இடைவெளிக்கு திரும்புகின்றனர் என்பது தெரிந்தவுடன், விராட் கோலி எங்களிடம் வந்து, அனைவரும் கீழே சென்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்க வேண்டும். நாம் எழுப்பும் சத்தம் இன்னும் பல வருடங்களுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துங்கள் என தெரிவித்தார்.

அதிர்ந்து போன லார்ட்ஸ்

அதிர்ந்து போன லார்ட்ஸ்

கோலி கூறியபடியே பெரும் விசில் சத்தத்துடனும், கைத் தட்டல்களுடனும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்ட இந்திய அணி அடுத்ததாக 3வது டெஸ்டுக்கு தயாராகி வருகிறது. இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் ஹெட்டிங்லேவில் நடைபெறவுள்ளது.

Story first published: Friday, August 20, 2021, 15:54 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+